Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கேசவ விநாயகத்தின் பதவி பறிக்கப்படுகிறதா?.. கே.டி. ராகவன் மீண்டும் பாஜகவில் இணைகிறாரா? பரபரப்பு

பாஜக முன்னாள் நிர்வாகி கே.டி. ராகவன் மீண்டும் அக்கட்சிக்கு திரும்புகிறார் என முன்னாள் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி சத்ய பிரபு தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி கட்சி பதவியை ராஜினாமா செய்த கே.டி.ராகவன் மீண்டு் பாஜகவில் இணைகிறார் என முன்னாள் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி சத்ய பிரபு தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் கே.டி. ராகவன். வழக்கறிஞர். இவர் டெல்லி பாஜக தலைமைக்கு மிகவும் நெருக்கமாக இருந்தார். மேலும் தமிழக பாஜகவின் முகமாக டெல்லியில் வலம் வந்தார்.

இந்த நிலையில் அவர் மீது கடந்த 2021 ஆம் ஆண்டு சர்ச்சைக்குரிய வகையில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியானது. மிகவும் மோசமான வகையில் அந்த வீடியோ இருந்தது.

கே.டி.ராகவன்

கே.டி.ராகவன்

இதையடுத்து கே.டி.ராகவன் தமிழக பாஜக பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதுகுறித்து அவர் 2021 ஆம் ஆண்டு ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழக மக்களுக்கும், கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். என்னைச் சார்ந்தவர்களுக்கும் நான் யார் என்று தெரியும். நான் 30 வருடங்களாக எந்த ஒரு பிரதிபலனும் இன்றி பணியாற்றி வருகிறேன். சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி ஒரு வீடியோ வெளிவந்ததை அறிந்தேன்.

வீடியோ

வீடியோ

என்னையும் என் கட்சியையும் களங்கப்படுத்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மாநிலத் தலைவர் அண்ணாமலையைச் சந்தித்து ஆலோசனை செய்தேன். நான் என்னுடைய கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்!. என ராகவன் பதிவிட்டிருந்தார்.

சமூகவலைதளம்

சமூகவலைதளம்

அந்த நாள் முதல் சமூகவலைதளங்களில் ராகவனின் வீடியோ வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் கட்சியிலிருந்தே ஒதுங்கிவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் பாஜகவிலிருந்து அண்மையில் விலகும் பலரும் கே.டி.ராகவன் திட்டமிட்டே வெளியேற்றப்பட்டார் என்கிறார்கள். அண்ணாமலை பாஜக தலைவராக வந்தது பெரிய தலைகளுக்கு பிடிக்கவில்லை.

ஒன் இந்தியா அரசியல்

ஒன் இந்தியா அரசியல்

இதனால் யாரெல்லாம் டெல்லிக்கு நெருக்கம் என பார்த்து அவர்களை கட்டம் கட்டி வார் ரூம் மூலம் அவர்களை பாலியல் புகாரில் சிக்க வைத்து அவமானப்படுத்தி வெளியேற்றினார் என குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில் இதுகுறித்து முன்னாள் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி சத்யபிரபு ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ்

ஆர்எஸ்எஸ்

இந்த பேட்டியில் அவர் நிர்மல்குமாருக்கும் அண்ணாமலைக்கும் என்ன பிரச்சினை என்பது குறித்து தெரிவித்துள்ளார். அது போல் அண்ணாமலையின் வலதுகரமாக இருக்கும் அமர்பிரசாத் ரெட்டிக்கும் அண்ணாமலைக்கும் கூட பிரச்சினை ஏற்பட்டு ரெட்டி ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து சத்ய பிரபு மேலும் கூறுகையில், அண்ணாமலையின் செயல்பாடுகள் பாஜக தலைமைக்கும் ஆர்எஸ்எஸ் தலைமைக்கும் பிடிக்கவில்லை. அண்ணாமலை பாஜகவையே காலி செய்துவிடுவார் என்ற ஆதங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் உள்ளது. உடனே அவரை கட்சி பதவியிலிருந்து தூக்கினாலும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையாகிவிடும். எனவே அவரது பதவிக்காலம் முடிவடைந்ததும் அவரை அப்பதவியிலிருந்து தூக்கவிடுவார்கள என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மோகன் பாகவத்- கேடி ராகவன்

மோகன் பாகவத்- கேடி ராகவன்

அண்ணாமலை கட்சிக்காக ஐபிஎஸ் வேலையையே விட்டுவிட்டு வந்துவிட்டார் என்பதால் ஆர்எஸ்எஸ்ஸில் சிலருக்கு அவர் மீது நன்மதிப்பு இருக்கிறது. ஆனால் எப்போது கே.டி.ராகவனின் வாழ்க்கையை தனது சுயநலத்திற்காக அண்ணாமலை காலி செய்தாரோ அப்போதே நன்மதிப்பெல்லாம் முடிந்துவிட்டது. ஏனென்றால் மோகன் பாகவத்தும் கேடி ராகவனும் மிகவும் நெருக்கமானவர்கள். இன்று வரை அவர்களிடையே நெருக்கம் தொடர்கிறது.

கேசவவிநாயகம்

கேசவவிநாயகம்

கே.டி.ராகவனை மீண்டும் கட்சியில் கொண்டு வர ஆர்எஸ்எஸ் முடிவு செய்துவிட்டது. ஆனால் கேடி ராகவன்தான் இப்போது வேண்டாம் , பிறகு வருகிறேன் என சொல்லிவிட்டார். எனவே அண்ணாமலை கே.டி.ராகவன் மீது எப்போது அவதூறு செய்தாரோ அப்போதோ அண்ணாமலை மீது ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுக்கு இருந்த நல்லெண்ணம் காணாமல் போய்விட்டது. திருச்சி சூர்யா சிவா - டெய்சி சரண் பிரச்சினையில் கேசவவிநாயகத்தின் பெயர் அடிப்பட்டது. அவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மிக மூத்த நிர்வாகி. அவரையே மாற்றும் முயற்சியில் ஆர்எஸ்எஸ் இருக்கிறது. அண்ணாமலைக்காக மாற்ற போகிறார்களா, இல்லை கேசவ விநாயகம் வந்து குறிப்பிட்ட காலம் ஆனதால் அவரை மாற்றபோகிறார்களா என்பது தெரியவில்லை. இவ்வாறு சத்யபிரபு தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+