Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஸ்டாலின், கவனமாக இருங்க".. பிள்ளையையும் கிள்ளிவிட்டு.. தொட்டிலையும் ஆட்டி.. கி. வீரமணியின் ஆவேசம்

சொத்து வரி உயர்வு குறித்து திராவிடர் கழக தலைவர் வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வளர்ச்சிக்குத் தேவை வரி.. வளர்ச்சி என்பதற்கு வரி தேவை. அது 'கடிதோச்சி மெல் எறிக' என்பதாக அமைய தமிழ்நாடு அரசும் கவனமாக இருப்பது அவசியம்" என்று திமுக அரசுக்கு, திராவிடர் கழக தலைவர் அறிவுறுத்தி உள்ளார்.

தமிழக அரசு சமீபத்தில் சொத்து வரியை உயர்த்தி உத்தரவிட்டது... குறிப்பாக சென்னை மாநகராட்சியில் 600 சதுரஅடி முதல் 1200 சதுரஅடி வரை 75 சதவீத சொத்து வரி உயர்த்தப்பட இருக்கிறது.

ஏற்கெனவே, 600 சதுரஅடிக்கு ரூபாய் 810 சொத்து வரி செலுத்தியவர்களுக்கு ரூ.1215 உயர்த்தப்பட்டிருக்கிறது... 1201 சதுரஅடி முதல் 1800 சதுரஅடி வரை 100 சதவீத வரி உயர்வும், 1801 சதுரஅடிக்கு மேலாக உள்ள வீடுகளுக்கு 150 சதவீத சொத்து வரி உயர்வும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 நேரு விளக்கம்

நேரு விளக்கம்

மேலும், வணிக வளாகங்களுக்கு 150 சதவீத வரி உயர்வும், கல்வி நிலையங்களுக்கு 100 சதவீத வரி உயர்வும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து, திமுக அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளன.. அதிலும் அதிமுக தமிழகம் முழுக்க போராட்டமே நடத்திவிட்டது.. எனினும் இந்த சொத்து வரி உயர்வுக்கு தாங்கள் காரணம் இல்லை என்று திமுக விளக்கம் தந்துள்ளது.. செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே என் நேரு சொன்னதாவது:

 சொத்து வழிகாட்டி

சொத்து வழிகாட்டி

"சென்னையில் நிலத்தின் மதிப்பை கணக்கிட்டுதான் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சொத்தின் வழிகாட்டி மதிப்பு உயர்ந்துள்ளது, கூரை வீடுகளுக்கு வரி உயர்வு இல்லை. மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையிலேயே சொத்து வரி உயர்த்தப்பட்டது,.. ஏழை மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டின் பிற நகரங்களுடன் ஒப்பிடுகையில் சென்னையில் சொத்து வரி குறைவுதான். தமிழகத்தில் 100% முதல் 150% சொத்து வரி உயர்வு 7% வீடுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

 கி.வீரமணி

கி.வீரமணி

1.4% குடியிருப்புகளுக்கு மட்டுமே 150% வரி வரை உயர்த்தப்படுகிறது. 83% வீடுகளுக்கு 25% முதல் 50% வரை சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது" என்றார். எனினும் அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.. டிடிவி தினகரனும், கண்டனத்தை தெரிவித்துள்ள நிலையில், திமுகவுக்கு கி.வீரமணி சப்போர்ட் செய்துள்ளார்.. இதுகுறித்து ஒரு அறிக்கையும் வெளியிட்டு, எதிர்க்கட்சிகளை சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்:

 நிதி மேலாண்மை

நிதி மேலாண்மை

"தமிழ்நாட்டில் கடந்த 10 மாதங்களாக தி.மு.க. ஆட்சி, அதன் சீரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில் சிறப்பாக நடைபெறுகிறது... இக்கட்டான பொருளாதார நெருக்கடி உண்டாகும் வண்ணம் கடந்த பத்தாண்டுகளாக ஆட்சி செய்தவர்கள், மக்கள் வரிப் பணத்தை எப்படி பயனுறு வகையில் செலவழிப்பது, அதற்கேற்ப எப்படி திட்டமிட்டு வருவாயைப் பெருக்குவது என்பது பற்றியெல்லாம் கவலைப்படாது கடனுக்கு மேல் கடன் வாங்கியது (வட்டிக் கட்டக் கூட புதுக்கடன் வாங்கிக் கட்டும் தவறான நிதி மேலாண்மையை நடத்திய நிலையில்).

 அறிஞர்கள்

அறிஞர்கள்

புதிய தி.மு.க. அரசு அனுபவம்மிக்க பொருளாதார மேதைகளையும், நிதி நிர்வாக அறிஞர்களையும் கொண்ட நிதி ஆலோசனைக் குழுவை - உலக அளவில் புகழடைந்தவர்களைக் கொண்டு அமைத்து அவர்களது ஆலோசனைப்படியே, கடும் நிதிப் பற்றாக்குறை, நெருக்கடியை சமாளித்திட ஏழை, எளிய மக்கள் பாதிக்காத வகையிலும், நடுத்தர மக்கள் ஓரளவு தாங்கும் வண்ணமும் புதிய வருவாய் பெருக்கலை, நிதி ஆலோசகர்கள் கருத்துப்படி ஆராய்ந்தே முடிவெடுத்துள்ளனர்.

 பொருளாதார விதி

பொருளாதார விதி

அண்மையில் நகர்ப்புற சொத்து வரிகளை உயர்த்தியுள்ளது தமிழ்நாடு அரசு.. எந்த அரசும் வரி போடாமல் ஆட்சி செய்ய முடியாது என்பதும், அப்படி போடப்படும் வரி தாங்கக் கூடியவர்களுக்குப் போடப்பட வேண்டும் என்பதும், வசதியானவர்களிடம் வசூலிக்கவேண்டும் என்பதும்தான் ஒப்புக்கொள்ளப்பட்ட பொருளாதார விதி.

 நிதி கமிஷன்

நிதி கமிஷன்

சென்ற 10 ஆண்டுகாலத்தில் சொத்து வரிகளை உயர்த்திடத் தயங்கியதால்தான் - ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஆய்வு செய்து, அதற்கேற்ப சொத்து வரிகளை உயர்த்தவேண்டும் என்பதைக்கூட வேண்டுமென்றே சரியாக அமல்படுத்தாததினால்தான், 15 ஆவது நிதிக் கமிஷன் மாநில அரசுகளுக்குக் கொடுத்த வழிகாட்டும் ஆணைப்படி - நகர்ப்புற வசதிகள் தமிழ்நாட்டில் 58 விழுக்காடு என்பது அதிகமான அளவில் உள்ளதால்தான் நகர்ப்புற சொத்துவரியை உயர்த்துவது தேவை - இன்றியமையாதது என்று அத்துணை ஆலோசனைக் குழு உறுப்பினர்களும் ஒருமனதாக முடிவு எடுத்து அறிவித்த பிறகே இந்த வரி உயர்வுகள் போடப்பட்டுள்ளன.

 ஏமாற்று வித்தை

ஏமாற்று வித்தை

வரி போட அவர்களே முன் நிபந்தனை - உள்ளாட்சி நிதி மானியம் உதவி தர ஆணையிட்டுவிட்டு, அதை மாநில அரசு செயல்படுத்தும்போது, இங்கே 'போர் - ஆட்டம்' என்பது ஏமாற்று வித்தையல்லாமல் வேறு என்ன? 'பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவது' என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது! 2021-2022 முதல் 2025-2026 நிதி ஆண்டுவரை உள்ளாட்சிகளுக்கான மானிய உதவித் தொகை 13,943 கோடி ரூபாயைத் தர இந்த நிபந்தனையை 15 ஆவது நிதிக் கமிஷன் இணைத்திருக்கிறது என்பதை முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் நாராயணன் விளக்கியுள்ளதோடு, 15 ஆவது நிதிக் கமிஷனின் உறுப்பினர் அனூப்சிங் என்பவருக்கும் இதனை உறுதிப்படுத்திக் கூறியுள்ளார்!

 அரைவேக்காடு

அரைவேக்காடு


இது புரியாமல் இங்குள்ள அரைவேக்காட்டு அரசியல்வாதிகள் - சில கட்சித் தலைவர்கள் ஏதோ தி.மு.க. இப்படி ஒரு காரணத்தைக் கூறுகிறது என்பதுபோல பொறுப்பின்றிப் பேசுவது அவர்களது அறிவு சூன்யத்தையே காட்டும். வளர்ச்சிக்குத் தேவை வரி! வளர்ச்சி என்பதற்கு வரி தேவை. அது 'கடிதோச்சி மெல் எறிக' என்பதாக அமைய தமிழ்நாடு அரசும் கவனமாக இருப்பது அவசியம்! " என்று குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+