போயும் போயும் பாஜகவுடன் கூட்டணி.. அன்புமணி ராமதாஸை வெளுத்து வாங்கிய காடுவெட்டி குரு மகள்!
சென்னை: அன்புமணி ராமதாஸுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்றால் போய் பாஜகவில் இணைந்து கொள்ள வேண்டியது தானே? ஏன் வன்னியர் மக்களை ஏமாற்றுகிறீர்கள்? என காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை காட்டமாகக் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாஜவுடன் கூட்டணி அமைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது பாமக. பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜக - பாமக இடையிலான கூட்டணி ஒப்பந்தம் நேற்று காலை கையெழுத்தானது. தொடர்ந்து, சேலத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உடன் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில், பாமக - பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ளதற்கு மறைந்த காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வன்னியர் சங்க தலைவராக இருந்த காடுவெட்டி குருவின் மகள், குரு.விருதாம்பிகை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய குரு. விருதாம்பிகை, "சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக மற்றும் வன்னியர்களின் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இருக்கும் பாஜவுடன் பாமக கூட்டணி அமைத்து இருப்பது ஏற்கத்தக்கது அல்ல. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் கலவரம் ஏற்படும் என்று தற்குறித்தனமாக கூறும் அண்ணாமலை தலைமையிலான பாஜவுடன் கூட்டணி வைப்பதால் வன்னியர் மக்களுக்கு என்ன பயன்?
ராமதாஸ் தன்னுடைய அன்பு மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி வேண்டும் என்றால் தந்தையும் மகனும் வேண்டுமென்றால் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து கொள்ள வேண்டியதுதானே? ஏன் என் பின்னாடி வன்னியர் சமூகம் உள்ளது என வன்னிய மக்களை ஏமாற்றுகிறீர்கள்?
சமூக நீதி மற்றும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த எதிராக இருக்கும் பாஜக உடன் கூட்டணி வைக்கப்பட்டது சுயநலம். சமூக நீதி, இட ஒதுக்கீடுக்காக பாமக குரல் கொடுத்து வந்தது. ஆனால் இந்த நலன்களை பார்க்காமல், எதிராக இருக்கும் பா.ஜ.க வுடன் கூட்டணி அமைத்து இருப்பது அன்புமணியின் சுயநலம்.
அதிமுக உடன் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், திடீரென பா.ஜ.க உடன் கூட்டணி உறுதி செய்து இருப்பது கட்சியில் பிரதானமாக இருக்கும் வன்னியர் சமூகம் கூட எதுவும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. கூட்டணியில் எந்த அடிப்படையில், என்ன கோரிக்கை பேசினோம் என்பதை கூட அவர்கள் தெரிவிக்கவில்லை.
ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் நலன் பெற மட்டுமே கட்சியை மாற்றி இருக்கின்றனர். கட்சி உருவாக காரணமாக இருந்து உயிர்நீத்த குடும்பங்களுக்கு நிதி உதவியை கூட பாமக செய்யவில்லை. இந்த கூட்டணி முடிவு பல நிர்வாகிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வன்னியர் சமூக மக்களுக்கு நலம் செய்யும் கட்சிகளுக்கு தேர்தலில் ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்து பாமக கூட்டணியை தமிழக அரசியல் களத்தில் இருந்து அகற்றுவேன்" எனத் தெரிவித்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications