மகளிர் உரிமைத் தொகை ரூ 3000 ஓகே! அதென்ன கோடைக்கால சிறப்பு தொகுப்பு ரூ 2000!
சென்னை: கலைஞர் உதவித் தொகை பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு தலா ரூ 1000 வழங்கிய நிலையில் கோடைக்கால சிறப்புத் தொகை ரூ 2000 எதற்காக வழங்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியான மகளிர் உரிமைத் தொகை ரூ 1000 கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த உரிமைத் தொகையை பெற அரசு சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அது பூர்த்தியாகும் பெண்களுக்கு மாதம் ரூ 1000 வழங்கப்படுகிறது.
தற்போது வரை பல்வேறு கட்டங்களாக பயனாளிகள் சேர்க்கப்பட்டு சிறிய தளர்வுகளையும் செய்ததில் 1.31 கோடி பேர் மகளிர் உரிமைத் தொகையை பெற்று வருகிறார்கள்.
இந்த உரிமைத் தொகை மாதந்தோறும் 15-ஆம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் முன்கூட்டியே அந்த பணம் வரவு வைக்கப்படுகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் திடீரென ரூ 5000 மகளிர் உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்ட மெசேஜை போனில் பார்த்ததும் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
காலை 11 முதல் 12 மணிக்குள்ளாக அனைத்து பயனாளிகளுக்கும் ரூ 5000 வரவு வைக்கப்பட்டுவிட்டது. இந்த 5000 எதற்கு என்பது குறித்து முதல்வர் தனது ட்விட்டரில் வீடியோ வெளியிட்டிருந்தார்.
அதில் "தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்!
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!
#DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு தலா 1000 என ரூ 3000 சரி! அதென்ன கோடை காலத்தில் சிறப்புத் தொகுப்பாக ரூ 2000 வழங்கப்பட்டுள்ளது ஏன் என்பதை பார்ப்போம்.
சட்டசபை தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளது. மே 9ஆம் தேதியுடன் தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் முடிந்துவிடும். ஆனால் மகளிர் உதவித் தொகை மாதந்தோறும் 15ஆம் தேதி வழங்கப்படுகிறது.
எனவே இந்த 2000 ரூபாய் மகளிர் உரிமை தொகை என சொன்னால் அது சரியாக இருக்காது என்பதால்தான் கோடைக்கால சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் 2000 வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி தொடர்ந்தால் மகளிர் உரிமைத் தொகை ரூ 2000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என ஸ்டாலின் உறுதியளித்த நிலையில் அந்த மகளிர் உரிமைத் தொகைதான் சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் இப்போதே வழங்கப்பட்டுவிட்டது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
-
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
சீட்டுக்கு மட்டும் பேசும் திருமா! தமிழகம் வாழ..திமுக வீழ வேண்டும்! செய்வீர்களா? ஜெ ஸ்டைலில் எடப்பாடி -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது!












Click it and Unblock the Notifications