தமிழர்களை வான் பார்க்கச் செய்த பேனா.. கலைஞர் பேனா காற்றிலும் எழுதுக.. வைரமுத்து ட்விட்
சென்னை: சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில் முதல்வரின் திறமைக்கும் பொறுமைக்கும் சாட்சி சொல்லும் பேனா.. கலைஞர் பேனா. காற்றிலும் எழுதுக என்று வைரமுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது.

கருணாநிதியின் இலக்கிய பணியை போற்றும் வகையில் அவரது நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது.
கருணாநிதி நினைவிடத்திற்கு பின் பகுதியில் பெரிய நுழைவு வாயில் அமைத்து கண்ணாடி பாலம் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று பேனா நினைவு சின்னத்தை பார்வையிடும் வகையில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி கேட்டு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியது.
இதை பரிசீலித்த மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு பொதுமக்களின் கருத்து, மீனவ சமுதாய மக்களின் கருத்துகளை கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது. இதன்படி, கடந்த ஜனவரி மாதம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.
அனைவரும் தெரிவித்த கருத்துகள் பதிவு செய்யப்பட்டு அறிக்கையாக தயாரிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த நினைவு சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பி இருந்தது. இந்த நிலையில், சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி கொடுத்துள்ளது.

பேனா நினைவு சின்னத்திற்கு மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ள நிலையில், முதல்வரின் திறமைக்கும் பொறுமைக்கும் சாட்சி சொல்லும் பேனா என்று ட்விட்டரில் வைரமுத்து பதிவிட்டு உள்ளார். இது தொடர்பாக வைரமுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது:-
தமிழர்களை வான் பார்க்கச் செய்த பேனா.. கடலையே மை செய்யும் தீராத பேனா.. கடற்கரை மணலினும் பெருஞ்சொற்கள் எழுதிய பேனா.. ஒன்றிய அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பேனா.. முதல்வரின் திறமைக்கும் பொறுமைக்கும் சாட்சி சொல்லும் பேனா.. கலைஞர் பேனா காற்றிலும் எழுதுக" என்று பதிவிட்டுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications