மகளிர் உரிமைத்தொகை.. புதிய பயனாளிகளுக்கு வெளியான இனிப்பான செய்தி.. என்னன்னு பாருங்க
சென்னை: கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் புதிய பயனாளிகளுக்கு உரிமைத்தொகை 10 ஆம் தேதியான சனிக்கிழமை வழங்கப்படுகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் உரிமைத் தொகை வழங்குகிறார்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது திமுக தனது தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது. நிதி நிலையை காரணம் காட்டி அந்த திட்டம் நிறைவேற்றுவதில் தொடர்ந்து தாமதம் ஆனது. இதனால், மகளிர் உரிமைத்தொகை திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என இல்லத்தரசிகள் பெரிதும் எதிர்பார்த்தனர். இந்தநிலையில், கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், விடுபட்டவர்களும் மேல் முறையீடு செய்ய தமிழக அரசு அவகாசம் வழங்கியுள்ளது. இதன்படி தகுதி வாய்த மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மெசெஜ் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் புதிய பயனாளிகளுக்கு நாளை உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு றிவித்துள்ளது.
மகளிர் உரிமைத்தொகை: இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் வழிநின்று மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மட்டுமின்றி மகளிர் நலன் காக்கும் திட்டங்களையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
மகளிருக்கு அதிகாரம் வழங்கும் முயற்சியில் இந்தியாவிலேயே அனைத்து மாநிலங்களையும், பின்னுக்கு தள்ளி முந்தி நிற்கிறது தமிழ்நாடு அரசு அந்த வகையில்தான். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் 27-3-2023 அன்று, தமிழ்நாடு சட்டமன்றத்தில் மகளிர் உரிமைத் தொகை குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சுயமரியாதையோடு வாழ: குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவர்களுக்கு ஆண்டிற்கு ரூபாய் 12,000/- உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டமானது பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் அவர்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் உயரிய நோக்கம் கொண்டது.
தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் 24-7-2023 அன்று தொடங்கி வைத்தார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைந்து கொள்ள 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வரப்பெற்ற நிலையில், அவற்றில் தகுதியுள்ள 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டது.
புதிதாக 7.35 லட்சம் பேர்: தமிழ்நாட்டின் வரலாற்றில் மிகப் பெரிய திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை, பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த நாளான 15-9-2023 அன்று காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் மகளிர், மாதந்தோறும் ரூ 1000/- பெற்று பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்தார்.
மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ், முகாம்களில் விண்ணப்பித்து ஆய்வு நிலுவையில் இருந்த விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்டு, தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள 7 லட்சத்து 35 ஆயிரம் பயனாளிகளுக்கும், ஏற்கனவே, வழங்கப்பட்டு வரும் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுடன் சேர்த்து, மொத்தம் 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையினை நாளை (10.11.2023) வழங்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
உரிமைத் தொகை வழங்கும் விழா: இத்திட்டத்தில் தற்போது இணைந்துள்ள 7 இலட்சத்து 35 ஆயிரம் மகளிர் உள்ளிட்ட பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கிடும் விழா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், நாளை (10-11-2023) காலை 10.30 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் நாளைய தினமே (10-11-2023 அன்று) அமைச்சர்கள் தலைமையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா நடைபெறவுள்ளது
-
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications