இதுவரை புதிய ரேஷன் கார்டு வாங்காதவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வாங்கினால் நிச்சயம் இரண்டு நன்மை
சென்னை: இதுவரை புதிய ரேஷன் கார்டு வாங்காதவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வாங்கினால் நிச்சயம் இரண்டு பயன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. முதல் பலன் என்னவென்றால், மகளிர் உரிமை தொகை. மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து பெற வாய்ப்புகள் உள்ளது. அடுத்ததாக இரண்டாவது வாய்ப்பு என்றால், ஒவ்வொரு முறையும் தமிழக அரசு தேர்தலுக்கு முந்தைய ஜனவரி மாதத்தில் பொங்கல் பரிசாக பணம் தந்துள்ளது. 2019 முதல் 2024 வரையிலான ஆண்டுகளே சாட்சி. எனவே அந்த பணமும் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இன்றைக்கு குடும்ப அட்டை மிகவும் இன்றியமையாதது. அது இல்லாவிட்டால், அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவது, அரிசி, பருப்பு, சர்க்கரை கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் பெறுவது சாத்தியமே இல்லை.. அதேபோல் குடும்ப அட்டையான ரேஷன் கார்டு தான் ஒரு குடும்பம் என்பதற்கான அடையாளம்.. ரேஷன் கார்டு வாங்கிவிட்டால், எளிதாக வாக்காளர் அடையாள அட்டை வாங்கிவிடலாம். அங்கு நிரந்தமாக குடும்பமாக வசிக்கும் ஒருவருக்கு அரசின் சலுகைகள், உரிமைகள் பெறுவதற்கு இன்றைக்கு ரேஷன் கார்டு முக்கியமானது.

புதிதாக திருமணம் ஆனவர்கள் அல்லது ஏற்கனவே திருமணம் ஆகி தனியாக வசித்தாலும் இதுவரை ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்காதவர்கள் விரைவாக விண்ணப்பித்து ரேஷன் கார்டு வாங்கினால், அரசின் இரண்டு பெரிய சலுகைகளை பெற முடியும்..
சலுகை ஒன்று
இந்த ஆண்டு இறுதிக்குள் புதிதாக ரேஷன் கார்டு வாங்கினால், ஜனவரி மாதம் அரசு ஒருவேளை பொங்கல் பரிசாக ஏதாவது ரொக்கம் தந்தால், அதனை வாங்கிவிட முடியும். அத்துடன் பொங்கல் பரிசும் வாங்க முடியும். கடந்த 2019, 2020, 2021, 2022, 2023, 2024 ஆகிய காலக்கட்டங்களில் வழங்கப்பட்டது. 2025ம் ஆண்டு மட்டும் பொங்கல் பரிசாக ரொக்கம் வழங்கப்படவில்லை..
பொங்கல் பரிசு
ஆனால் 2026 ஜனவரியில் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கம் வழங்கப்பட அதிகப்படியான வாய்ப்பு உள்ளது. எவ்வளவு தொகையை அரசு வழங்க போகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் வழக்கமாக வழங்கப்படும் 1000 அல்லது 2000த்தைவிட அதிகமாக தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அரசு வாக்காளர்களை கவர பொங்கல் பரிசு தருவதற்கு வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. எனவே பொங்கல் பரிசு பெற விரும்புவோர் ஜனவரி மாதத்திற்கு முன்பே ரேஷன் கார்டு பெற்றுவிட்டால் , அவர்களுக்கும் பரிசு தொகை (ஒரு வேளை அறிவித்தால்), கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சலுகை இரண்டு
அதேபோல் 2025ம் ஆண்டு இறுதிக்குள் ரேஷன் கார்டு வாங்கிவிட்டால், மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்க முடியும். அதன் மூலம் மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கக்கூடும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வர இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ளது. எனவே புதிதாக மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கும் தகுதியுடையோருக்கு அரசு கண்டிப்பாக மகளிர் உரிமை தொகையை தாமதிக்காமல் வழங்கிவிடும். விரைவாக விண்ணப்பங்களை பரிசீலனை செய்யவும் வாய்ப்பு உள்ளது.
புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிப்பது எப்படி
இறுதியாக ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே வெள்ளம், எதிர்பாராத பிரச்சனைகள் வரும் போது, அரசிடம் நிவாரணம் பெறவும் முடியும். ரேஷன் கார்டு பெறுவதற்கு ஆன்லைனிலேயே எளிதாக விண்ணப்பிக்க முடியும். https://www.tnpds.gov.in/pages/registeracard/register-a-card.xhtml என்ற அதிகாரப்பூர்வ பக்கத்தில் எளிதாக விண்ணப்பிக்க முடியும். கணவன், மனைவி இருவரின் பெயரும் அவர்களது குடும்ப அடடையில் நீக்கப்பட்டதற்கான ஆவணங்கள், திருமண பத்திரிக்கை, புகைப்படம், குடியிருக்கும் இடத்திற்கான ஆதாரங்கள் மற்றும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தால் எளிதாக விண்ணப்பிக்க முடியும். தாசில்தார் ஆபிஸ் எல்லாம் போய் அலைய வேண்டியது இல்லை..
-
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு












Click it and Unblock the Notifications