கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. பயனாளிகளுக்கு குட்நியூஸ்! குறை தீர்க்க வந்த "கியூ.ஆர் குறியீடு"
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2வது கட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள நிலையில் புதியவர்களுக்கு வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கும் பணிகளும் ஆரம்பமாகி உள்ளது.. எனினும் இது தொடர்பான புகார் ஒன்று முளைக்கவும், அதையும் நிவர்த்தி செய்துள்ளது தமிழக அரசு.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் முக்கிய நோக்கமே, பெண்களுக்கு நிதி உதவி வழங்கி அவர்களின் வாழ்க்கைச் சூழலை சிறப்பாக்குவதாகும். இந்த திட்டத்தின் மூலம், தகுதியுள்ள பெண்களின் வங்கி கணக்குகளில் ரூ.1000 நேரடியாக வைக்கப்படுகிறது.

மகளிர் உரிமைத் தொகை
குறைந்த வருமானம் கொண்ட பெண்கள், இதன் மூலம் தங்கள் தேவையான செலவுகளை கையாள முடியும். சிறிய பொருட்கள் வாங்க, மருத்துவ செலவுகளை கட்ட, குழந்தைகளின் கல்விக்கு உதவுவது போன்ற பல விஷயங்களில் இந்த உதவி மிகவும் பயன்பட்டு கொண்டிருக்கிறது..
இந்த திட்டத்தின் செயல்முறை மிகவும் எளிமையானது. பெண்கள் தங்களுடைய வங்கி கணக்கை பதிவு செய்தவுடன், அரசு பணத்தை நேரடியாக அந்த கணக்கில் வைக்கிறது. பணம் சேர்க்கப்பட்டதை பற்றி SMS மூலம் தகவல் பெறுவது, பெண்களுக்கு தேவையான நிதியை உடனே பயன்படுத்தும் சுதந்திரத்தையும் வழங்குகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்
இதன் மூலம், பெண்கள் தங்களுடைய நிதியை திட்டமிட்டு பயன்படுத்த முடிகிறது.. ஒரு குடும்பத்தில் பெண்கள் தாங்களே சிறிய நிதி ஆதரவைப் பெற்றால், குடும்பத்தின் பொருளாதார நிலைமையும் மேம்படும்.. எனவே அரசின் இதற்கான முயற்சி, பெண்கள் வாழ்கையில் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு தருவதாகவே அமைந்துள்ளது..
அதுமட்டுமல்ல, நம்முடைய தமிழக அரசின் பெண்கள் மேம்பாட்டு முயற்சிகளின் ஒரு முக்கியமான பகுதியாகும். இதன் மூலம், சமூகத்தின் பல பகுதிகளில் வாழும் பெண்களுக்கு நிதி ஆதரவு கிடைக்கும் என்பதால், இது அவர்களின் வாழ்க்கையையே சிறப்பாக மாற்றும் ஒரு வழியாகவும் கருதப்பட்டு வருகிறது..
ஆவணங்கள் சமர்ப்பிப்பு
இப்படிப்பட்ட சூழலில், மனு அளித்தும், தகுதியான ஆவணங்கள் சமர்ப்பித்தும், பலருக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்கிறார்கள்.. எனவே இந்த குறையையும் அரசு சரிசெய்ய முயற்சி எடுத்துள்ளது.. தகுதியுள்ள பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்பதற்காகவே முறையீடு செய்வதற்கு, கியூ.ஆர்., குறியீடு மற்றும் https://tnega.org/kmut-grivance என்ற வெப்சைட் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் குறைகள் அல்லது பிரச்சனைகள் இருப்பவர்கள், இதில் தங்களது புகாரை பதிவு செய்யலாம். இதற்கு, முதலில் புகார் தெரிவிப்பவர்கள் தங்கள் பெயர், குடும்ப தலைவர் பெயர், செல்போன் நம்பர், ரேஷன் அட்டை எண் போன்ற அடிப்படை தகவல்களை தர வேண்டும்.
ஓடிபி - ஆன்லைன் புகார்
அந்த தகவல் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, புகார் அளித்த செல்போன் நம்பருக்கு OTP அனுப்பப்படும். அந்த குறியீட்டை பயன்படுத்தி, விண்ணப்பதாரர்கள் தங்களது குறையை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யலாம்.
புகாரை ஆன்லைன் வழியாக பதிவு செய்தவுடன், அது வருவாய் கோட்டாட்சியர் மூலம் பரிசீலிக்கப்படும். சரியானதும் தகுதியுள்ளதும் என உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, மகளிர் உரிமைத் தொகை சம்பந்தப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும்.
இந்த முறையின் மூலம், பெண்கள் தங்களுடைய பிரச்சனைகளை எளிதாக மற்றும் பாதுகாப்பாக அதிகாரிகளிடம் தெரிவிக்க முடியும், மேலும் குறை சரிபார்க்கப்பட்ட பிறகு நிதி நேரடியாக வழங்கப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications