மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய்.. குடும்பத் தலைவிகளே கடைசி சான்ஸ் இது.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டோருக்கான சிறப்பு முகாம்கள் ஆகஸ்ட் 18ம் தேதியான நேற்று தொடங்கியது, இன்றும் ஆகஸ்ட் 20ம் தேதியான நாளையும் நடக்கிறது. இந்த முகாம்களை பயன்படுத்தி இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த திட்டப்படி ஒவ்வொரு மாதமும் பெண்களின் வங்கி கணக்கில் 1000 ரூபாய் செலுத்தப்பட உள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்காக செயல்படுத்தப்படும்.

இந்த திட்டத்தில் பயன்பெற 1.5 கோடிக்கும் அதிகமான பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டோருக்கான சிறப்பு முகாம்கள் இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. எனவே வாய்ப்பை தவறவிடாமல் விண்ணப்பிக்க தமிழக அரசுகேட்டுக்கொண்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை செயல்படுத்திட மொத்தம் உள்ள 1,428 ரேஷன் கடைகளில் முதற்கட்டமாக ரேஷன் கடைகளில் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு தன்னார்வலர் என்ற கணக்கில் 1,730 சிறப்பு விண்ணப்பப் பதிவு முகாம்கள் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் கடந்த 4-ந்தேதி வரை நடைபெற்றன.
மீதமுள்ள 724 ரேஷன் கடைகளில் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு தன்னார்வலர் என்ற கணக்கில் 1,781 சிறப்பு விண்ணப்பப் பதிவு முகாம்கள் கடந்த 5-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை இரண்டாம் கட்டமாக நடைபெற்றது. இதற்காக முன்கூட்டியே தேவையான விண்ணப்பங்கள் வீடு வீடாக சென்று குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. 2 கட்டங்களாக நடந்த முகாம்கள் மூலமாக 9,08,380 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் விடுபட்டவர்களுக்கு 18-ந்தேதி (நேற்று) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்றும் நாளையும் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. விண்ணப்பப் பதிவு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களிலும் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெற உள்ளது.
ஏற்கனவே நடந்த இடங்களிலேயே இந்த முகாம்களும் நடைபெற உள்ளது. இதுகுறித்த விவரங்கள் ரேஷன் கடைகளிலும் தகவல் பலகையாக வைக்கப்பட்டிருக்கிறது. விண்ணப்பப் பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
நீங்கள் விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை. மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம் செய்ய வருவாய்த் துறையில் வருமானச் சான்று, நில ஆவணங்கள் போன்ற எந்த சான்றுகளையும் நீங்கள் எடுத்துவர தேவையில்லை.
இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு சென்னை மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் 044-25619208 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளாம். மற்ற மாவட்டத்தின் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையினை தொடர்பு கொள்ளலாம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications