மோடிக்கு ஏப்ரல் மாதம் கலைஞர் கெட்டவர்; இன்று நல்லவரா? நா நயம் மாறிய நாணய விழா?
சென்னை: முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நாணய விழாவை முன்வைத்து பாஜக மற்றும் திமுக இடையே சில அரசியல் மாற்றம் நடந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் ஒரு சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது.
கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த விழாவில் கலந்து கொண்டார். இதற்கு முன்னதாக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை ராஜ் பவனில் கொடுத்த தேநீர் விருந்தில் முதல்வர் ஸ்டாலின், தனது அமைச்சரவை சகாக்களோடு பங்கேற்றார். நாணய வெளியீட்டு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "முதல்வர் ஸ்டாலின், "நா நயம் மிக்க நம் தலைவருக்கு நாணயம் வெளியிடுவது மிகவும் பொருத்தமானது. நூற்றாண்டு விழா நாயகருக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை தலைவரை நாம் கொண்டாடி வந்த நிலையில், இப்போது இந்தியாவே கொண்டாடுகிறது" என்றார்.

இந்த விழாவுக்கு முன்னதாக பாஜகவுடன் ஒரு சுமுக உறவைக் கடைப்பிடிக்க திமுக திட்டமிட்டு சில காய்களை நகர்த்தி வந்ததாகச் சிலர் சந்தேகம் கிளப்புகின்றனர். அதாவது சுதந்திரதின விழாவில் பாஜகவைச் சேர்ந்த தமிழிசை செளந்தரராஜனின் தந்தை குமரி அனந்தனுக்கு திமுக அரசு 'தகைசால் தமிழர்' விருது அளித்துக் கவுரவித்தது. இதற்கும் கருணாநிதி நாணய விழாவுக்கும் ஒரு தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழிசை தந்தையைத் தமிழ்நாட்டில் கௌரவப்படுத்திய திமுக தலைவர் ஸ்டாலின், தனது தந்தைக்கு தேசிய அளவில் ஒரு மரியாதையைச் செய்வதற்காகக் குமரி அனந்தன் மகள் வழியே சில காய்களை நகர்த்தி இருக்கிறார் என்றும் சொல்கிறார்கள். அதைப்போலவே அண்ணாமலை பற்றி இதுவரை கடுமையாக விமர்சித்து வந்த திமுக தலைமையின் போக்கிற்கு மாறாக பாஜக மாநிலத் தலைவரை நாணய வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளும்படி முதல்வரே தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார். விழாவுக்கு வந்த மத்திய அமைச்சர் கருணாநிதியின் நினைவிடம் வரை சென்று மரியாதை செலுத்துகிறார்.
அரசு விழாவுக்கு வந்தவர், நினைவிடம் செல்லவேண்டிய தேவையே இல்லையே? அந்தளவுக்கு பாஜக மற்றும் திமுக உறவில் சுமுகமான போக்கும் இல்லையே? என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இது குறித்து பத்திரிகையாளர் பிரியன் பல விசயங்களைப் பகிரங்கமாகப் போட்டு உடைத்துள்ளார். அவர் பேசுகையில், "ஒரு கடந்த ஒரு வருட போராட்டத்திற்குப் பிறகு இந்த நாணயம் வெளியாகியுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு மத்தியில் கோரிக்கை வைத்தார்கள். ஆனால், பாஜக அரசு அதைக் கிடப்பில் போட்டு வைத்திருந்தது. அதன்பின்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துப் பேசி அனுமதி பெற்றார்கள். ஆனால் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூரின் நாணயம் 3 நாட்களில் வெளியானது. தேர்தலுக்கு முன்னதாக ஒபிசி வகுப்பினரின் வாக்குகளைப் பெறுவதற்காக உடனே செய்தார்கள்.

அப்படிப் பார்த்தால் கலைஞர் நாணயம் மிகத் தாமதமாகவே வெளியாகி உள்ளது. திமுகவுக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இந்த நாணயம் வெளியீடு என்பது ஒரு முக்கியமான நிகழ்வு. அரசியல் ரீதியாக, அரசு ரீதியாக எதிராக உள்ள இரண்டு கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. பிரதமர் மோடி கருணாநிதியைப் புகழ்ந்து அறிக்கை விடுத்துள்ளார். இந்தியா அளவில் கருணாநிதிக்கு ஒரு மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக கருணாநிதி படத்தைத் திறப்பதற்கு ராம்நாத் கோவிந்தை கூப்பிட்டார்கள். அண்ணாதுரையின் நாணயத்தை வெளியிட அந்தக் காலத்தில் ஜனாதிபதியைத்தான் அழைத்தார்கள். கட்சி சார்பில்லாமல் இருக்க வேண்டும் என நினைத்து அப்படி அழைத்தார்கள். இந்த முறை மத்திய அரசின் பிரதிநிதியாக ராஜ்நாத்சிங்கை அழைத்திருக்கிறார்கள். இவரை அழைத்ததில் அரசியல் இருப்பதாக நினைக்கவில்லை. பாஜகவில் உள்ளவர்களின் அதிகம் இந்துத்துவா பற்றி அதிகம் பேசாதவர் இவர். அதனை மனதில் வைத்து இவரை அழைத்திருக்கலாம். சிலர் ஏன் ராகுலைக் கூப்பிடவில்லை என்று கேட்கிறார்கள். அந்தக் கேள்வி காங்கிரஸ் தரப்பில் இருக்கத்தான் செய்கிறது. ராகுல் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். ஒரு மத்திய அமைச்சருக்கு இணையான பதவியில் இருக்கிறார் அவர்.
இன்னும் சொல்லப் போனால் 'இந்தியா' கூட்டணியில் திமுக உள்ளது. எனவே அவரையும் அழைத்திருக்கலாம். அவரையும் அழைத்திருந்தால் நடுநிலையாக நிகழ்ச்சி இருந்திருக்கும். கடந்த 3 மாதங்கள் முன்னதாக தேர்தல் தொடங்குவதற்கு முன்னால் மோடி பேசும் போது, 'திமுக மகன் மற்றும் மகள் என குடும்பத்தை மட்டுமே கவனிக்கும். வேறு யாரைப் பற்றியும் கவலை கொள்ளாது. நாட்டிற்காக ஒன்று செய்யாது. திமுகவும் காங்கிரசும் குடும்பக் கட்சிகள்" என்று பேசியவர் இன்று, 'கருணாநிதியின் தொலைநோக்கு பார்வை எதிர்கால இந்தியா வழிநடத்தும். தமிழ்நாட்டின் வளர்ச்சி மீது அவர் அதிக அக்கறை கொண்டிருந்தார்' என்று மாற்றிப் பேசுகிறார்.
இந்த மூன்று மாதத்திற்குள் என்ன அப்படி நடந்துவிட்டது? கேள்வி வராதா? ஆளுநரை எதிர்த்து வந்த திமுக திடீர் என்று அவரது தேநீர் விருந்தில் பங்கேற்கிறது. ஆளுநர் அவர் போக்கை மாற்றிக் கொண்டதைப் போலத் தெரியவில்லை. மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு நிதி வழங்குவதில் பராமுகம் காட்டுகிறது. மெட்ரோவுக்கு நிதியே ஒதுக்கவில்லையே? அதற்குப் பிறகு மூன்று மெட்ரோ திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கிவிட்டதே? வெள்ள நிவாரண நிதி கேட்டீர்களே? அதை பாஜக அரசு கொடுத்துவிட்டதா? 'திராவிட நாட்டை பிளக்கிறது' என்று இப்போது ஆளுநர் பேசி இருக்கிறார். திராவிடம் என்ற வார்த்தை திமுக கட்சி பெயரில் இருக்கிறது. அதை எதிர்த்துப் பேசாமல் தேநீர் விருந்துக்கு ஏன் போனார் முதல்வர்?
அதிமுக பாஜகவைவிட்டு விலகி வந்த போது சிறுபான்மை வாக்குகளை இழுக்கவே பாஜக அதிமுகவை மறைமுகமாகத் தனித்துப் போட்டியிட வைத்துள்ளது என்று திமுக குற்றஞ்சாட்டியது. இன்றைக்குச் சிறுபான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற திமுக ஏன் பாஜக அமைச்சரை அழைத்து நிகழ்ச்சி நடத்துகிறது? உங்களுக்கு வாக்களித்த சிறுபான்மையினருக்கு எதிராக வக்ஃபு வாரிய சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறதே பாஜக? அப்படியான நேரத்தில் பாஜக உடன் உறவு வைக்க என்னத் தேவை திமுகவுக்கு வந்தது? இதற்குள் ஒரு அரசியல் காய் நகர்வு இருப்பதாகத்தான் சந்தேகம் வருகிறது. திமுக கூட்டணிக்கு ஏதோ ஒரு குழப்பத்தை ஏற்படுத்த பாஜக இந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஏதோ திட்டம் வைத்துள்ளது" என்கிறார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications