கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஏடிஎம் கார்டை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம்? பணம் போட முடியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான exclusive ஏடிஎம் கார்டு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த கார்டு குறித்து மக்கள் பலருக்கும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவை குறித்த விளக்கங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.

தமிழ்நாட்டில் வழங்கப்பட உள்ள ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் இன்று தொடங்கப்பட உள்ளது. திட்டம் தொடங்கப்பட்டு பெரும்பாலும் 5 நாட்களில் அதாவது செப்டம்பர் 20ம் தேதி முதல் மாத தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

Kalaingar 1000 RS Housewives money Scheme: Can you use the ATM account as the savings account?

தற்போது வரை 1.06 கோடி பயனாளிகள் இதில் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இன்று முதல் ஒவ்வொருவராக பணம் பெற தொடங்குவார்கள். 1.70 கோடி பேர் விண்ணப்பம் செய்த நிலையில் அதிகபட்சம் 1.06 கோடி பேருக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்காக தமிழ்நாடு முழுக்க விழா எடுக்கப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுக்க மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்ய தொடங்கி உள்ளனர்.

இந்த விழாவை மாவட்ட அளவில் சிறப்பாக நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆய்வு செய்துஉள்ளனர். விழாவை சிறப்பாக, பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பிரம்மாண்டமாக தமிழ்நாடு முழுக்க இந்த திட்டத்திற்காக பெரிய அளவில் விழா கொண்டாட உள்ளனர். பெரும்பாலும் 90 சதவிகித பயனாளிகளுக்கு நாளையே பணம் அனுப்பப்படும். இந்த திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மேல்முறையீடு செய்யும் முகாம்களும் அடுத்து தொடங்க உள்ளன.

இன்று ரூபாய் 1 மெசேஜ் அனுப்பி வங்கி கணக்குகள் சோதனை செய்யப்படும். நேற்றே பலருக்கும் இந்த சோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. நேரடியாக வங்கி கணக்கில் மக்களுக்கு பணம் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஏடிஎம் கார்டுகள் ஏற்கனவே மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன.

குழப்பம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான exclusive ஏடிஎம் கார்டு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த கார்டு குறித்து மக்கள் பலருக்கும் சந்தேங்கள் எழுந்துள்ளன. அவை குறித்த விளக்கங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.,

இந்த ஏடிஎம் கார்டுகள் எல்லோருக்கும் கொடுக்கப்படவில்லை. ஏற்கனவே கணக்கு உள்ளவர்களுக்கு கார்டுகள் தரப்படவில்லை. இந்த திட்டத்திற்கு கீழ் கணக்கு தொடங்கியவர்களுக்கு மட்டுமே கார்டு கொடுக்கப்பட்டு உள்ளது.

பெரும்பாலும் கூட்டுறவு வங்கிகளில்தான் இந்த புதிய வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு உள்ளன.

இதனால் இந்த கார்டை பர்சனல் கணக்கு போலவும் பயன்படுத்த முடியும். அதாவது நீங்களும் இதில் பணம் போட்டு சேமிக்க முடியும்.

இந்த வங்கி கணக்கு அரசு தொடங்கி கொடுத்தது என்றாலும் முழுக்க முழுக்க உங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.

இதில் பணம் எடுப்பது இன்றி பணம் போட்டு சேமிக்க நினைத்தாலும் சேமிக்கலாம்.

நவீன் சிப் வைக்கப்பட்ட கார்டுகள் ஆகும் இவை. பாதுகாப்பு கருதி வை பை கார்டுகள் கொடுக்கப்படவில்லை. வை பை வைத்தால் பணம் திருடப்படும் பிரச்சனை உள்ளது. அதனால் வைக்கப்படவில்லை.

இந்த ஏடிஎம் கார்டு உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட போன் என்னுடன் இணைக்கப்பட்டு இருக்கும். அதனால் நீங்கள் ஓடிபி கேட்கும் போது உங்கள் ஆதார் இணைக்கப்பட்ட போன் எண்ணை பயன்படுத்த வேண்டும்.

இதில் மினிமம் பேலன்ஸ் வைக்க வேண்டியது இல்லை. இது ஜீரோ பேலன்ஸ் கணக்கு ஆகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+