நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் உரை.. “தமிழினமே பாராட்டுகிறது” - திருமாவளவன்
சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் பேசியிருந்தது கவனம் பெற்றிருந்தது. இந்நிலையில், தமிழினமே கமல்ஹாசனை பாராட்டுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருக்கிறார்.
கமல்ஹாசனின் பேச்சு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கொடுத்த பதிலடி என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில், கமல்ஹாசனின் பேச்சை திருமாவளவன் பாராட்டியிருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

என்ன பேசினார் கமல்ஹாசன்?
"பிரியப்பட்ட சகோதரி.. கேட்கும் என்று நினைக்கிறேன். தெலுங்கில் இசை பாடி வந்த அந்த மா மனிதர், இசைமேதை தியாகராஜன். அவர் பிச்சை பாத்திரத்திலிருந்து எடுத்த சில்லறைகள் நவீன தாளத்திற்கு உதவாது என்று தெரிந்தவர்கள் நீங்கள். நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்திதான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகு உங்கள் பிச்சை பாத்திரம் உருமாற்றப்பட்டது.
பிச்சை பாத்திரம்
பிச்சை குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை, தமிழரை பார்த்து என்ன சொல்லுகிறீர்கள்? தமிழ் பிச்சை எடுக்கக்கூட உதவாதா? ஓரளவு உண்மைதான். ஒரு தர்க்கத்திய அறிவுரை தந்தாய். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே! தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது
சாமிடுகிறேன்
தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். தங்கச்சி, ஓட்டையும், நாட்டையும் இந்த கமலஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன், கருணையுடன் நீங்களே ஏற்பீர்.
வீழ்க வளமுடன்
உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக்கொள்ளுங்கள். பகுத்தறிந்த தமிழ்ச் சித்தன் கூற்று இது 'உம் வினை உம்மை சுடுக, என்றும் எங்கள் நாடு நீடூழி வாழும், உம் வினை உம்மைச் சுடுக, ஓட்டப்பமும் வீட்டைச் சுடுக. வந்தீர் வென்றீர் செல்வீர்' இது உலக நியதி, அரசியல் நியதியும்கூட. வீழ்க வளமுடன். தமிழ் என்றும் வாழும் நலமுடன். வணக்கம், அவை வந்தடைந்த தலைவர் கூட்டத்திற்கு. சென்றும் வருவேன், நாளை எமதே. உங்கள் கமல்ஹாசன், ஜெய்ஹிந்த்" என்று பேசியிருந்தார்.
திருமாவளவன் சொன்னது என்ன?
இது குறித்து திருமாவளவன் பேசியதாவது, "தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் எதிரான ஒரு மனநிலையை கொண்டவர்களுக்கு, கமல்ஹாசன் பதிலடி கொடுத்திருக்கிறார். அவருக்கு விசிக சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மொத்த தமிழினமும் அவரை பாராட்டுகிறது. பாஜகவினர் வயிற்றெரிச்சலில் பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications