அபிநந்தன் நலமுடன் வருவார்.. குடும்பத்தாரிடம் போனில் பேசி நம்பிக்கையூட்டிய கமல்ஹாசன்
பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டு இருக்கும் இந்திய விமானி அபிநந்தனின் குடும்பத்தாரிடம் கமல்ஹாசன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
சென்னை: பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டு இருக்கும் இந்திய விமானி அபிநந்தனின் குடும்பத்தாரிடம் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டு உள்ளார். நேற்று மதியம் இவர் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார்.

பாகிஸ்தானின் எப் -16 ரக போர் விமானத்தை துரத்திக் கொண்டு சென்ற போது இவரின் மிக் - 16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்த இவர் அந்நாட்டு ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார்.
இவரை மீட்க வேண்டும் என்று இந்தியா கடுமையான கோரிக்கைகளை வைத்து வருகிறது. அதேபோல் அரசியல் தலைவர்களும் இவரை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்து வருகிறார்கள்.
இதற்கு மத்தியில் அபிநந்தனின் குடும்பத்தாரிடம் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இன்று அதிகாலை கமல்ஹாசன் போன் மூலம் அவர்களிடம் பேசியுள்ளார்.
அவர் வருவார்... நம்பிக்கையாக இருங்கள். அரசு இதற்கான நடவடிக்கையை எடுக்கும். அவரின் தைரியத்தை பாராட்டுகிறேன். முழு நம்பிக்கையுடன் காத்திருங்கள்.
அவர் கண்டிப்பாக நலமுடன் திரும்புவார், என்று போனில் கமல்ஹாசன் அவர்களிடம் தெரிவித்து இருக்கிறார். அபிநந்தனின் குடும்பம் சென்னை மாடம்பாக்கத்தில்தான் வசித்து வருகிறது. தற்போது அவரின் வீட்டிற்கு வெளி நபர்கள் செல்வது தடை செய்யப்பட்டு இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications