சின்னப்பொண்ணுக்கு ஏன் டிஸ்லைக்.. வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றிய கமல்ஹாசன்!.. விழித்த ராஜு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் போட்டியாளர் சின்னப்பொண்ணுவின் கதை சரியில்லை என கூறி டிஸ்லைக் கொடுத்த ராஜுவை கமல் நாசுக்காக கடிந்து கொண்டார்.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த 3ஆம் தேதி முதல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் லக்சுரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் ஒவ்வொரு கன்டெஸ்டன்ட்டும் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து கூற வேண்டும். அவர்களுக்கு சக போட்டியாளர்கள் பிடித்திருந்தால் லைக்கும் , ரொம்ப பிடித்திருந்தால் ஹார்ட்டினும், சுத்தமாக பிடிக்காவிட்டால் டிஸ்லைக்கும் கொடுக்க வேண்டும்.

அந்த வகையில் முதலில் இசைவாணி தான் கடந்து பாதையில் இருந்த முட்கள் குறித்து கண்ணீர் மல்க தெரிவித்தார். இவருக்கு ஹார்டின்களும், லைக்குகளும் கொடுக்கப்பட்டன.

கடந்து வந்த பாதை

கடந்து வந்த பாதை

இதையடுத்து சின்னப்பொண்ணு கதை சொல்லும் போது அதில் சுவாரஸ்யம் இல்லை, கதையை விளக்கும் விதம் சரியில்லை என கூறி ராஜு டிஸ்லைக் கொடுத்தார். ஆனால் சின்னப்பொண்ணு பட்ட கஷ்டங்கள் தனக்கு புரிவதாகவும் அதை சொல்லும் விதம் தனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறினார்.

கதை டிஸ்லைக்

கதை டிஸ்லைக்

இதே போல்தான் இசைவாணி கதை சொன்னதற்கு டிஸ்லைக் கொடுக்காவிட்டாலும் "நீ அழாமல் கதை சொல்லியிருக்க வேண்டும்" என அறிவுரை வழங்கினார். பேருந்தில் கைக் குழந்தையுடன் அயர்ந்து தூங்கிய போது குழந்தையை கீழே தவறவிட்டதாகவும் அது கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து படிக்கட்டு அருகே சென்ற போது கண் விழித்து பதறியடித்து குழந்தையை தேடி படிக்கட்டு அருகே இருந்து தூக்கியதாகவும் சின்னப்பொண்ணு தெரிவித்தார்.

கைக் குழந்தை

கைக் குழந்தை

அதாவது வயிற்று பிழைப்புக்காக கைக்குழந்தையையும் எடுத்துக் கொண்டு கச்சேரி சென்றதையும், அப்படியெல்லாம் கஷ்டப்பட்டால்தான் உணவு உண்ணவே முடியும் என்று கல் மனதையும் உருக வைக்கும் அளவுக்கு கதை சொன்ன நிலையிலும் ராஜு இவ்வாறு பேசியது பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு பெரிதும் கோபத்தை ஏற்படுத்தியது.

பிக்பாஸ் சீசன் 5

பிக்பாஸ் சீசன் 5

இதையடுத்து பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நேற்று கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது அவர் ராஜுவின் தலையில் கொட்டாத குறையாக அவரை கேட்டார். ராஜுவிடம் கமல் , உங்க கதை சரியில்லைனு சொன்னா உங்களுக்கு எப்படி இருக்கும்? நீங்கள் ஏன் சின்னப்பொண்ணுவின் கதையை பிடிக்கவில்லை என சொன்னீர்கள். யார் கதை சொன்னாலும் அதில் திரைக்கதையை தேடுகிறீர்கள் என கமல் கேட்டார்.

போகாத பாதை

போகாத பாதை

அதற்கு ராஜு , அவர் சொன்ன கதை எனக்கு புரிய வேண்டும் என்றால் அது கோர்வையாக இருக்க வேண்டும் என்றார். அதற்கு கமல், ராஜுவுக்கு கதை பிடிக்காமல் போனதற்கு அவருடைய வயதும் ஒரு காரணமாக இருக்கலாம். அந்த அனுபவம் நீங்கள் போகாத பாதையாக இருக்கலாம். யார் கதையாக இருந்தாலும் அதில் அடிநாதத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

குட்டிய கமல்

குட்டிய கமல்

இசைவாணி கதையை கேட்டுவிட்டு எதற்காக இந்த பொண்ணு இப்படி அட்டகாசம் செய்யுது. ஒரு இடத்தில் பாட விடலைன்னா வேற மேடைல போய் பாடு என சொல்வது எளிது. ஆனால் அதில் இருக்கும் பிரச்சினையை பாருங்கள். தாமரைச் செல்வி கண்கலங்க காரணம் சின்னப்பொண்ணுவின் வலி அவருக்கு புரிகிறது என கமல் தெரிவித்தார். Narration முக்கியம்தான், அதற்காக நான் உங்களுக்கு டிஸ்லைக் போடவில்லை என கூறியவாறே ராஜுவை கமல் குட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+