ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.. அந்தவகையில், கூட்டணியுடன் இன்னும் முடிவு எட்டப்படாத நிலையில், இன்றைய தினம் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இன்று அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியிருக்கிறது.
நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் மற்றும் திமுக இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது..

இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்..
தனிச்சின்னத்தில் போட்டி?
குறிப்பாக திமுக தரப்பில் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்துத் தெளிவான தகவல்கள் பரிமாறப்பட்டதாகவும், தொகுதிப் பங்கீட்டைப் பொறுத்தவரை எந்தவிதமான பெரிய கருத்து வேறுபாடுகளும் இன்றி சுமுகமாகவே பேச்சுவார்த்தை நகர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்..
இருந்தாலும் இந்த பேச்சுவார்த்தையில் ஒரு முக்கிய முட்டுக்கட்டையாக இருப்பது தேர்தல் சின்னம் குறித்த விவகாரம்தான்.. திமுக தரப்பில் இருந்து மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது..
கமல்ஹாசன் - திமுக
ஆனால், இதற்கு மக்கள் நீதி மய்யம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக தெரிகிறது.. காரணம், கடந்த தேர்தல்களில் தங்கள் கட்சியின் பேட்டரி டார்ச் சின்னம் மக்களிடையே சுமார் 4 சதவீத வாக்குகளை பெற்றுத் தந்துள்ளதாகவும், தொண்டர்கள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் அந்தச் சின்னம் ஆழமாகப் பதிந்துள்ளதாகவும் அருணாச்சலம் சுட்டிக்காட்டினார்.. அதனால் தங்கள் தனித்துவத்தை இழக்க விரும்பாமல் டார்ச் லைட் சின்னத்திலேயே போட்டியிடுவதில் அக்கட்சி உறுதியாக உள்ளது..
தற்சமயம் எழுந்துள்ள இந்த சின்னம் தொடர்பான சிக்கலைத் தீர்க்க, கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் முடிவே இறுதியானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இது குறித்து விவாதிக்கவும், அடுத்தகட்ட முடிவுகளை எடுக்கவும் இன்று மாலை 5 மணிக்கு சென்னை அண்ணாநகரில் உள்ள சாம்கோ ஹோட்டலில் அவசரக் கூட்டம் நடைபெற்றது.
மநீம இன்று முடிவு
கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்றனர். திமுக கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் கட்சிகளுக்குத் தொகுதிகளைக் குறைத்துவிட்டு, புதிய கூட்டணிக் கட்சிகளுக்கு இடம் ஒதுக்க வேண்டிய கட்டாயத்தில் தற்சமயம் திமுக தலைமை உள்ளது..
இன்று மாலை அவசர ஆலோசனை
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது திமுகவிற்கு பலமாகத் தெரிந்தாலும், மக்கள் நீதி மய்யம் போன்ற ஒரு வளரும் கட்சிக்கு அது ஏற்கத்தக்கதாக தெரியவில்லை.. தங்களது தனித்துவ அடையாளமான டார்ச் லைட் சின்னத்தை விட்டுக் கொடுத்தால், எதிர்காலத்தில் கட்சியின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற அச்சம் கமல்ஹாசனிடம் இருப்பது நியாயமானதாகவும் தெரிகிறது..
அதே சமயம், பெரிய கூட்டணியின் ஆதரவு இல்லாமல் வெற்றி பெறுவதும் கடினம் என்பதால், ஏதேனும் ஒரு சமரசப் புள்ளி உடனடியாக எட்டப்பட வேண்டிய அவசியமும் இப்போது உள்ளது.
கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது
கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், டார்ச் லைட் சின்னத்தில்தான் போட்டியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் கூறுகையில், “100% டார்ச் லைட் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் வலியுறத்தியுள்ளனர். இதை கேட்டுக்கொண்ட தலைவர் கமல்ஹாசன், ஓரிரு நாட்களில் முடிவை தெரிவிப்பதாக கூறியிருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications