மீண்டும் மீண்டும் தேடி வரும் "நம்மவர்".. நெகிழ்ந்து நிற்கும் காவிரி டெல்டா மக்கள்
சென்னை: காவிரி டெல்டா மாவட்ட மக்களுக்கு ஒரு சின்ன ஆறுதல் என்றால் அது கமல்ஹாசன் இரண்டாவது முறையாக அப்பகுதிகளை பார்வையிடுவதுதான்.
கஜா புயல் பாதித்த பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை புரட்டி போட்டுவிட்டது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்து வேறு வழியின்றி தவித்து வருகிறார்கள். அவர்களை என்னதான் அரசியல் கட்சி தலைவர்கள் போய் பார்த்தாலும் எல்லாம் கண்துடைப்பு என்பது அவர்களுக்குத் தெரியும்.
பல ஆண்டுகளாக வளர்த்து வந்த தென்னை உள்ளிட்ட மரங்கள் நல்ல விளைச்சலின் போது முறிந்து விழுந்து லட்சக்கணக்கில் நஷ்டத்தை ஏற்படுத்திய நிலையில் பயிர்களுக்கு ஒன்றும் பாதியுமாக நிவாரண தொகையை தமிழக அரசு அறிவித்ததால் மக்கள் மனம் நொந்து காணப்படுகின்றனர். மேலும் குக்கிராமங்களில் எந்தவித நிவாரண பொருட்களும் கிடைக்காமல் விரக்தியில் உள்ள அவர்களுக்கு ஒரே ஆறுதல் கமல்ஹாசன் இரு முறை அவர்களை சந்தித்து செல்வதுதான்.

வேரோடு சாய்ந்த மரங்கள்
ஏற்கெனவே புய்ல பாதித்த பகுதிகளில் பெரும்பாலான இடங்களை பார்வையிட்டார் கமல். இந்நிலையில் தற்போது மீட்பு பணிகளை பார்வையிட சென்று வருகிறார். அந்த வகையில் தஞ்சை மாவட்டம் பாப்பநாடு கிராமத்தில் பார்வையிட்ட கமலிடம் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்த்து வந்த தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தது குறித்து மக்கள் கவலை தெரிவித்தனர்.

நிவாரணம் சேரவில்லை
அது போல் நீர்முலை மற்றும் தலைஞாயிறு இடையே சோழகன்குடிகாடு என்ற கிராமத்துக்கு சென்ற கமல்ஹாசனிடம் கடந்த 15 நாட்களாக எந்த அதிகாரிகளும் தங்களை பார்க்கவில்லை என்றும் எந்த நிவாரண பொருட்களும் தங்களுக்கு வந்து சேரவில்லை என்றும் தெரிவித்தனர். பின்னர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கிராமத்துக்கு சென்றார்.

செய்வதறியாமல் தவிப்பு
அங்கு 310 ஹெக்டேர் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தது குறித்து 1500 குடும்பத்தினர் கண்ணீர் மல்க கமலிடம் கூறினர். மேலும் விழுந்த மரங்கள் அனைத்து 14 முதல் 15 ஆண்டுகளுக்கு முன் நட்டது என்றனர். எனவே அடுத்த 15 ஆண்டுகளுக்கு தங்கள் வாழ்வாதாரம் குறித்து என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.

கேள்விக்குறி
இந்த கிராமத்தின் விஏஓ கிராமத்தை பார்த்து சேதங்களை மக்கள் கூற குறித்து கொண்டதோடு சரி சேதமடைந்த இடங்களை பார்வையிடவில்லையாம். இந்த டெல்டா பகுதிதளில் உள்ள நிலங்களில் விவசாயம் செய்தால் நன்கு செழிக்கும் என்றும் காவிரி நீர் பிரச்சினையால் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தென்னை விவசாயத்துக்கு மாறிவிட்ட நிலையில் தற்போது அதுவும் கேள்விக்குறியாகிவிட்டதாக கூறுகின்றனர்.

ஆறுதல்
அதுபோல் திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டை கிராமத்தில் மின் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களிடம் பேசினார். இதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் நீர்முலை கிராமத்தில் கமலுக்காக 300-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். அப்போது கமல்ஹாசனாவது தங்களை வந்து பார்க்கிறார்களே என மகிழ்ச்சி தெரிவித்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications