சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கட்சியில் தலைவர்களை தேடுகிறேன்.. தகுதி இல்லாதவர்களை நீக்க வேண்டியது கடமை.. கமல்ஹாசன்

Google Oneindia Tamil News

சென்னை: கட்சியில் தலைவர்களை தேடிக் கொண்டிருக்கிறேன். அந்தத் தகுதிகள் இல்லாதவர்களை நீக்க வேண்டியது எனது கடமையாகவும் இருக்கிறது என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் ஏப்ரல் 24-ஆம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன் சிறப்பு நிகழ்வையொட்டி உள்ளாட்சியில் தன்னாட்சி என்ற தலைப்பில் கமல்ஹாசன் இணையவழி கருத்தரங்கில் பேசினார்.

அவர் பேசுகையில் நான் கடந்த 35 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருப்பது சாதனை என்பது சொல் அல்ல, செயல் என்பதே ஆகும். இங்கு யார் பேசினாலும் செயல் என்பதைத்தான் அடையாளப்படுத்துகிறார்கள். கிராம சபை, ஊர் சபை உள்ளிட்டவை மன்னர் காலத்திலிருந்து உள்ளன.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் மர்ம நபர்கள்... சந்தேகம் கிளப்பும் கமல்ஹாசன்..! வாக்கு எண்ணிக்கை மையங்களில் மர்ம நபர்கள்... சந்தேகம் கிளப்பும் கமல்ஹாசன்..!

பெரிய கோவில்

பெரிய கோவில்

அதை பற்றி பெருமை பேசிக் கொண்டிருப்பதல்ல. ராஜராஜசோழன் பெரிய கோவிலைக் கட்டினார் என பெருமைப்பட்டுக் கொள்ள முடியாது. நாம் கட்டிய மருத்துவமனைகள் அதன் திறப்பு விழாவின் போதே இடிந்து விழுகின்றன என்ற காலத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நேர்மையிருந்தால் வீரம் தானாக வரும்.

துரோகங்கள்

துரோகங்கள்

நீங்கள் மக்கள் நீதி மய்யம் கட்சியில் சேர வேண்டும் என சொல்லவில்லை. நீங்கள் கட்சியை விமர்சனம் செய்தும் கட்சிக்கு உதவும் வேலையைச் செய்தால் போதுமானது. கட்சியில் இருக்கும் துரோகங்கள் நாம் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதை விட வெளியில் இருப்பவர்கள் சொன்னால்தான் புரியவும் செய்யும், வலியும் தெரியும்.

அப்பழுக்கு

அப்பழுக்கு

மக்கள் நீதி மய்யம் விமர்சனங்களுக்கு தயாராக இருக்கிறது. எங்கள் கட்சி அப்பழுக்கற்ற ஒரு கட்சி என்று நான் சொல்ல மாட்டேன். விமர்சனங்களைச் சொன்னால் அப்படியா என முழு மனதோடு ஏற்றுக் கொள்வேன். மற்றபடி நம்மிடம் அழுக்கு இருக்கிறதா என துருவி துருவித் தேடிக் கொண்டிருக்கும் ஆளாகத்தான் நான் இருப்பேன்.

விஷயம்

விஷயம்

தகுதி இல்லாதவர்களை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்று. கட்சியில் தலைவர்களை தேடிக் கொண்டிருக்கிறேன். அந்தத் தகுதிகள் இல்லாதவர்களை நீக்க வேண்டியது என கடமையாகவும் இருக்கிறது. ஆட்சி என்பது கோட்டைக்குள் மட்டுமே செய்யும் விஷயம் அல்ல என கமல்ஹாசன் தெரிவித்தார்.

English summary
Makkal Needhi Maiam Party's president Kamal Haasan says that we should sack those who have not eligible for party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X