கமல் சொன்னதுல என்ன தப்பு.. அவர் சொன்னது சரிதான்.. கி வீரமணி சப்போர்ட்!
சென்னை: இந்தியாவின் முல் தீவிரவாதி நாதுராம் கோட்சே என்று கமல் கூறியதில் எந்த தவறும் இல்லை என தி.க தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் செய்த நடிகர் கமல்ஹாசன் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே என்றார். கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பும் கண்டனமும் எழுந்துள்ளது.

இந்நிலையில் கமலின் பேச்சுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி ஆதரவு தெரிவித்துள்ளார். கி.வீரமணி திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை அறிவாலயத்தில் இன்று சந்தித்தார்.
அதனைத் தொடர்ந்து கி.வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கமல் பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கி வீரமணி, இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே
கோட்சே என கமல் கூறியது சரிதான் என்றார்.
நாதுராம் கோட்சே ஆர்எஸ்எஸ் அமைப்பில் பயிற்சி எடுத்தவர். முதலும் அவர்கள் தான் கடைசியும் அவர்கள் தான் என்றும் கி.வீரமணி கூறினார்.












Click it and Unblock the Notifications