Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சஷ்டி சர்ச்சை..மதத்தை மாணவர்களிடம் திணிப்பதா? சேகர்பாபுவுக்கு எதிராக கொளத்தூர் மணி திவிக போராட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை நடத்திய முருகன் மாநாட்டு தீர்மானத்தின்படி மாணவர்களை கந்த சஷ்டி கவசம் பாட வைத்த அமைச்சர் சேகர்பாபுவைக் கண்டித்து கொளத்தூர் மணி தலைமையிலான திராவிடர் விடுதலைக் கழகத்தின் தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் சென்னையில் இன்று கண்டனப் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அண்மையில் பழனியில் முருகன் மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில், "முருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்குப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது" என்றும் "கந்தசஷ்டி விழாக் காலங்களில் அருள்மிகு முருகன் திருக்கோயில்களில் மாணவ, மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது" என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

dmk dvk kanda sashti

மேலும் முருகப்பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின் கீழ் உள்ள திருக்கோயில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப்பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்கு பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானங்களுக்கு அப்போதே பெரியார் இயக்கங்களும் இடதுசாரிகளும் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தன. இந்த நிலையில் சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் திருக்கோவிலில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகள் கந்த சஷ்டி பாராயணம் பாடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, 738 மாணவர்களுக்கு கந்த சஷ்டி பயிற்சி அளிக்கப்பட்டது; பயிற்சி பெற்ற மாணவர்கள் கந்த சஷ்டியை ஒப்புவித்தனர் என்றார்.

dmk dvk kanda sashti

இந்த நிகழ்ச்சிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை க.ராசேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னையில் இன்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாணவர் அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் "மாணவர்களிடம் மதத்தைத் திணிக்காதே" என்ற முழக்கத்துடன் அமைச்சர் சேகர்பாபுவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போராட்டம் நடத்திய தமிழ்நாடு மாணவர் கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+