கந்த சஷ்டி விழா.. திருச்செந்தூருக்கு சென்னையில் இருந்து நாளை சிறப்பு ரயில்.. புக்கிங் தொடங்கிடுச்சு!
சென்னை: கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு நாளை சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தாம்பரத்தில் இருந்து இரவு 9.35 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் மறுநாள் காலை 8 மணிக்கு திருச்செந்தூர் செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா 22-ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் 2-ம் திருவிழாவில் இருந்து 5-ம் திருவிழா வரை 4 நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 7 மணிக்கு யாகசாலையில் யாக பூஜை நடக்கிறது.

கந்த சஷ்டி விழா
6-ம் திருவிழாவான நாளை மறுநாள் (திங்கள்கிழமை) பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனைக்கு பிறகு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி - தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு மகா தீபாராதனை நடக்கிறது. மதியம் 2 மணிக்கு சுவாமியும், அம்பாளும் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார்.
அங்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு கடற்கரையில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. சூரசம்ஹாரம் நடக்கும் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் வகையில் பக்தர்கள் இடையூறு இல்லாத வகையில் நடைபெறுவதற்கு நீண்ட தூரம் கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்
தடுப்புகளுக்கு வெளியே இருந்து சுமார் 10 லட்சம் பக்தர்கள் சூரசம்ஹாரத்தை காணும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கந்த சஷ்டி விழாவிற்கு திருச்செந்தூர் செல்லும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வண்டி எண்: 06135/06136 தாம்பரம் - திருச்செந்தூர் சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து இரவு 9.35 மணிக்கு நாளை (அக்.26) கிளம்பும் ரயில் திருநெல்வேலிக்கு காலை 8 மணிக்கு வந்து சேரும்.
எங்கெல்லாம் நின்று செல்லும்
மறுமார்க்கத்தில் அக்டோபர் 27 ஆம் தேதி திருச்செந்தூரில் இருந்து இரவு 10.30 மணிக்கு கிளம்பும் ரயில் தாம்பரத்திற்கு மறுநாள் காலை 10.30 மணிக்கு வந்து சேரும். 18 பெட்டிகள் கொண்ட இந்த ரயில், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருதாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications