ஜிப்மர் உத்தரவு! மத்திய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி?.. இது நல்லதில்லை.. கனிமொழி கடும் தாக்கு
சென்னை: புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ள உத்தரவை மக்களவை எம்பி கனிமொழி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை. இங்கு மருத்துவக் கல்லூரியும் உள்ளது. இது மத்திய சுகாதாரத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த JIPMER என்பதன் முழு பெயர் ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்பதாகும்.
புதுவை என்பதாலும் இங்கு பிரென்ச் மக்கள் இன்னமும் வசித்துக் கொண்டிருப்பதாலும் முக்கியமாக இது ஒரு சுற்றுலா தலம் என்பதால் இந்த மருத்துவமனையில் இந்தியும், ஆங்கிலமும் ஆட்சிமொழியாக பயன்படுத்தப்படுகிறது.

அலுவல் மொழி
இந்த நிலையில் அலுவல் மொழியாக இந்தியை மாற்றுவது தொடர்பாக புதிய சுற்றிறிக்கையை ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் இயக்குநர் பிறப்பித்துள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: இதுவரை மத்திய அரசு அலுவலகங்களின் பதிவேடுகள் மற்றும் கோப்புகளில் இதுவரை இந்தியும் ஆங்கிலமும் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்தி
இந்கத நிலையில் இனி வரும் காலத்தில் அவற்றில் இந்தி மட்டுமே பயன்படுத்தப்படும் என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்தி திணிப்பிற்கு எதிராக தென் இந்தியாவில் போராட்டம் நடைபெறும் நிலையில் இந்த உத்தரவு பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏ ஆர் ரஹ்மான்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திதான் ஆங்கிலத்திற்கு மாற்று மொழி என்றும் அதுதான் இணைப்பு மொழி என்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் எதிர்வினையாற்றியிருந்தனர். இந்தி மொழி தொடர்பாக அஜய் தேவ்கனுக்கும் கன்னட நடிகர் சுதீப்புக்கும் இடையே சண்டையும் எழுந்தது.

ஏன் இந்தி வெறி
இந்த நிலையில் ஜிப்மர் உத்தரவுக்கு மக்களவை எம்பி கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் ஜிப்மர் உத்தரவை குறிப்பிட்டு அதில் உள்ள Hindi Only என்பதை சிவப்பு பேனாவால் கோடிட்டு கூறுகையில், ஒன்றிய அரசுக்கு ஏன் இந்த மொழி வெறி? ஒன்றிய அரசு திணிக்க முயலும் இந்தி வேலையில்லா திண்டாட்டத்தைத் தீர்க்குமா? சமத்துவமின்மை மாறுமா? ஏதேனும் ஒரு சமூகப் பிரச்சனையையாவது திருத்துமா? விரிசல்களை ஆழப்படுத்துவது நல்லதில்லை என கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications