டெல்லியில் அந்த இடத்திற்கு போனப்ப! போனில் கொந்தளித்த கருணாநிதி! ஆனால் இன்று! நாதழுதழுத்த கனிமொழி

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவராக இருந்தவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி, தனது மகள் கனிமொழியுடன் எந்த விஷயத்திற்காக சண்டையிட்டார் என்பது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார். அந்த விஷயத்தை சொல்லும் போது கனிமொழி நாதழுதழுத்தார்.

திமுக எம்பி கனிமொழி, சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் சில வார்த்தைகளின் கீழ் கேள்விகள் கேட்கப்பட்டன. கோபம், காதல், பாராட்டு, பாசம், பண்பு, அறிவுரை, எச்சரிக்கை, நம்பிக்கை ஆகிய 8 வார்த்தைகள் கொடுக்கப்பட்டிருந்தன. அதில் ஒவ்வொரு வார்த்தையாக கனிமொழி தேர்வு செய்ய வேண்டும். அதில் வரும் கேள்விக்கு அவர் பதில் அளிக்க வேண்டும்.

karunanidhi kanimozhi dmk

அந்த வகையில் அவர் நம்பிக்கை எனும் வார்த்தையை செலக்ட் செய்தார். அதில் 2026 என்ற எண் எழுதியிருந்தது. 2026 ஆம் ஆண்டு என்றாலே சட்டசபை தேர்தல் , திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி. பண்பு என்ற வார்த்தையை அவர் செலக்ட் செய்தார். அப்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் வந்தது.

எதற்கும் அஞ்சாத ஒரு பண்பு ஜெயலலிதாவுக்கும் இருந்தது. அதை நான் எப்போதுமே பாராட்டுவேன் என்றார். பிறகு பாராட்டு என்ற வார்த்தையை தேர்வு செய்தார். அதில் நரேந்திர மோடியின் படம் வந்தது. நிச்சயமாக பிரதமரை பாராட்ட வேண்டும் என்பது எனக்கு ஆசைதான். குறைந்தபட்சம் தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை தந்துவிட்டால் நிச்சயம் அவரை மனதார பாராட்டுவேன் என்றார்.

அடுத்ததாக பாசம் என்ற வார்த்தையை தேர்வு செய்தார் கனிமொழி. அதில் முதல்வர் ஸ்டாலினின் படம் இடம்பெற்றிருந்தது. அவர் ஒரு முதல்வர், எல்லாவற்றையும் தாண்டி மிக பாசமான அண்ணன். இந்த முறை நான் நாடாளுமன்றத்தில் பேசியதற்கு போனில் மெசேஜ் மூலம் பாராட்டிவிட்டு நான் வெளியே வரும் போது போன் செய்து அண்ணனுக்கே உரிய மகிழ்ச்சியுடன் பாராட்டினார். அது அவருடைய குரலில்தான் தெரியும்.

அடுத்த வார்த்தை எச்சரிக்கை என்பதை தேர்வு செய்த போது அதில் உதயநிதி ஸ்டாலினின் படம் வந்தது. புதியதாக அரசியல் பயணத்தை தொடங்கிய உதயநிதிக்கு இந்த விஷயத்தில் எல்லாம் எச்சரிக்கையாக இருங்கள் என சொன்னால் எந்த விஷயத்தை சொல்வீர்கள் என கேட்கப்பட்டது.

அதற்கு கனிமொழி, இல்லை இல்லை அவர்கிட்ட எல்லாரும் எச்சரிக்கையாக இருங்கள் என சொல்வேன். அடுத்ததாக காதல் என்ற வார்த்தையை தேர்வு செய்தார். அதில் தூத்துக்குடி என இருந்தது. நான் எதிர்பார்க்கவில்லை, ஆனால் பழகுவதற்கு தூத்துக்குடி மக்கள் அன்பானவர்கள், வெள்ளந்தியான மனிதர்கள். எப்படியாவது என் வாயில் இருந்து எங்க ஊர் என தூத்துக்குடி வந்துவிடும்.

அப்போது ஜெயரஞ்சனுக்கு கோபம் வரும். நீங்கள் என்ன இருந்தாலும் எங்கள் ஊர் (தஞ்சை) பொண்ணு என்பார். சென்னை, தஞ்சை மீது இருக்கும் காதல் எனக்கு தூத்துக்குடி மேலயும் இருக்கிறது. கோபம் என்ற வார்த்தையை தேர்வு செய்த போது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படம் வந்தது.

தந்தைக்கு மகள் மீது வந்த அந்த செல்ல கோபம் எதற்காக? என கேட்டதற்கு கனிமொழி கூறுகையில் நிறைய விஷயங்களில் நான் அப்பாவுடன் சண்டையிடுவேன். அவருக்கு மிகவும் கோபம் என்றால் இரவில் பயணம் செய்தால் வந்துட்டியா வந்துட்டியா என கேட்டபடியே இருப்பார். ஒரு முறை டெல்லிக்குச் சென்ற போது விமானம் தாமதமாகிவிட்டது. அப்போது நானும் ஒரு இடத்தில் இருந்து வாதம் செய்துக் கொண்டே இருந்தேன்.

இன்றும் நான் டெல்லிக்கு செல்லும் போது அந்த இடத்தில் இருந்து வந்துட்டியா என கேட்க யாரும் இல்லை என்பதை நினைக்கும் போது திரும்ப திரும்ப மனதில் வலியாக நிற்கிறது. கடைசியான வார்த்தை அறிவுரையை தேர்வு செய்தபோது விஜய்யின் படம் வந்தது. அப்போது கனிமொழி கூறுகையில் எனக்கு விஜய்யின் குடும்பத்தினருடன் சிறிய வயது முதலே பழக்கம் இருக்கிறது.

இன்று பெரிய நட்சத்திரமாக அவர் இருக்கிறார் என்றால் அதற்கான உழைப்பு, அதற்கான பாதை என எல்லாமே தெரிந்ததால்தான் அவரால் இந்த இடத்திற்கு வர முடிந்தது. எனவே அதே தெளிவோடும் அதே உழைப்போடும் அவர் தொடர்ந்து பயணம் செய்ய வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+