கொரோனா- சிறப்பாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி- அடுத்தும் முதல்வரே..கராத்தே தியாகராஜன் திடீர் புகழாரம்
சென்னை: கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி; அவரே அடுத்த முதல்வர் என காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் திடீரென புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை மாநகராட்சியின் முன்னாள் பொறுப்பு மேயராக இருந்தவர் கராத்தே தியாகராஜன். காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு திமுகவுக்கு எதிரான கருத்துகளை கூறி வந்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.

இதன்பின்னர் நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டார். ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது தொடர்பாக தமிழருவி மணியனைப் போல அதிகமான அறிவிப்புகளை வெளியிட்டவர் கராத்தே தியாகராஜன்ன். ஆனால் ரஜினிகாந்த் அரசியலுக்கே வரவில்லை என அதிரடியாக அறிவித்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து சென்னையில் ரஜினி ரசிகர்கள் என்ற பெயரில் போராட்டம் நடத்தப்பட்டது. இதனை ஒரு தன்னெழுச்சி போராட்டம் என கூறியிருந்தார் கராத்தே தியாகராஜன். காங்கிரஸிலும் தொடர முடியாமல், ரஜினிகாந்தும் கைவிட்ட நிலையில் தமது ஆதரவாளர்களுடன் அரசியல் நிலைப்பாடு தொடர்பாக சென்னையில் திங்களன்று ஆலோசனை நடத்தினார் கராத்தே தியாகராஜன்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா காலத்தில் தமிழக முதல்வர் எடப்பாட்டி பழனிசாமி மிக சிறப்பாக செயல்பட்டார்; தமிழகத்தின் அடுத்த முதல்வராகவும் எடப்பாடி பழனிசாமியே தொடருவார். அதிமுக அல்லது பாஜகவில் இணைவது தொடர்பாக அடுத்த 10 நாட்களில் முடிவை அறிவிக்கிறேன் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications