மெகா “டுவிஸ்டு”.. வெறும் 20 நிமிடம்.. உல்டாவான ரிசல்டு! கர்நாடகத்தில் ஓங்கிய கை.. தலைகீழான தாமரை
சென்னை: கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தொடக்கத்தில் முன்னிலை வகிப்பதாக கூறப்பட்ட பாஜக அடுத்த 20 நிமிடங்களில் பின்னடைவை சந்தித்து இருக்கிறது.
பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக மாநில பாரதிய ஜனதா அரசின் ஆட்சிகாலம் நிறைவடைய இருக்கும் நிலையில் கடந்த இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த மே 10 ஆம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்தது.

அதனை தொடர்ந்து கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரங்கள் வேகமெடுக்கத் தொடங்கின. அம்மாநிலத்தில் பிரதான கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகிய 2 தேசிய கட்சிகள், மாநில கட்சியான மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை தனித்தனியாக தேர்தலில் களம் கண்டன.
இதனால் அம்மாநிலத்தில் மும்முனைப் போட்டி நிலவியது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் கர்நாடகாவில் வெற்றிபெற்று தனித்து ஆட்சியை பிடிக்கும் என்றே கூறப்பட்டது. இந்த நிலையில் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் கடந்த 10 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதை தொடர்ந்து வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அக்கட்சி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் வெல்லாது என்றே கருத்துக்கணிப்பு முடிவுகல் காட்டியதால் மீண்டும் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

அதே நேரம் டைம்ஸ் நவ், இந்தியா டுடே உள்ளிட்ட சில ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்கும் என்று தகவல் வெளியாகின. தொங்கு சட்டசபை அமைந்தால் இம்முறையும் குமாரசாமியே கிங் மேக்கராக இருப்பார் என்று பேச்சுக்கள் எழுந்தன.
இந்த நிலையில்தான் இன்று காலை பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி இருக்கிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
தபால் வாக்குகளில் பாஜகவே முன்னிலை வகித்ததாக தகவல் வெளியானது. அதை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளிலும் முதல் 30 நிமிடங்களுக்கு மேல் பாஜகவே முன்னிலையில் உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதுவரை வெளியான முன்னிலை நிலவரங்களின்படி காங்கிரஸ் 108 இடங்களிலும் பாஜக 87 இடங்களிலும் மஜத 26 இடங்களிலும், இதர 3 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. 110 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரத்தின்படி இரு கட்சிகளும் தலா 49 தொகுதிகளில் முன்னிலை வகித்தன.
216 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரத்தில் பாஜக 100 தொகுதிகளிலும் காங்கிரஸ் 97 இடங்களிலும் முன்னிலை வகித்தது. ஆனால் அடுத்த 20 நிமிடங்களில் ஆட்டம் தலைகீழானது. காங்கிரஸ் பெரும்பான்மைக்கு தேவையான 113 இடங்களை தாண்டி செல்ல, பாஜகவே 85 க்கும் குறைவான இடங்களிலேயே முன்னிலை வகித்தது.
தற்போது வரை காங்கிரஸ் கட்சி முன்னிலையில் தொடர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 119 இடங்களிலும், பாஜக 72 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 26 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
-
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications