நீர் இல்லாமல் கேட்கவில்லை.. காவிரியில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.. ஆனால்.. துரைமுருகன் பேட்டி
சென்னை: கர்நாடக அணைகளில் தண்ணீர் கொடுக்க கூடிய அளவுக்கு போதிய நீர் உள்ளது. ஆனால், அதை தர மாட்டேன் என்று சொல்வது நியாயம் இல்லை என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார்.
காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்புகள் சார்பில் இன்று கர்நாடக மாநிலத்தில் பந்த் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழக பேருந்துகள் மாநில எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. பந்த் காரணமாக கர்நாடகாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று பிற்பகலில் கூடுகிறது.

இந்த நிலையில், இன்று தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காவிரியில் வினாடிக்கு 12, 500 கன அடி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் வலியுறுத்துவோம். ஆனால், காவிரி ஒழுங்காற்று குழு 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கதான் பரிந்துரைத்தது. அது இன்றைக்கு வந்து கொண்டுஇருக்கிறது. அது போதுமானதாக இல்லை.
பயிர்கள் காய்கின்றன.. ஆகையால் இன்றைக்கும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்திலும் இதே கோரிக்கையை வைப்போம். இதுவரையில் காவிரியில் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால், போதுமான அளவு என்று சொல்ல முடியாது. எதோ ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பராவயில்லை.. அவ்ளோதான்... கர்நாடக அரசு உச்ச நீதிமன்றம் செல்வது அவர்களுக்கு இஷ்டம்..

அவர்களிடம் தண்ணீர் இல்லாமல் இருந்து நாம் கேட்கவில்லை. நம்மிடம்தான் தண்ணீர் இல்லை. கரநாடக அணைகளில் தண்ணீர் கொடுக்க கூடிய அளவுக்கு போதிய நீர் உள்ளது. ஆனால், அதை தர மாட்டேன் என்று சொல்வது நியாயம் இல்லை. இரண்டு வகையில் நியாயம் இல்லை. ஒரு ஆற்றின் போக்கில் கடைமடைக்குதான் முன்னுரிமை தர வேண்டும். அந்த இயற்கை நியதியையும் கர்நாடகா பின்பற்ற மறுக்கிறது. நம்முடைய முதல்வர் அறிக்கை விடுகிறார்.
அதற்கும் செவி சாய்க்க மறுக்கிறார்கள். காவிரி ஒழுங்காற்று குழு கூறுவதையும் ஏற்க மாட்டோம் என்று அதற்காக மறியல் பண்ணுகிறார்கள். ஆயிரக்கணக்கான தமிழக மக்கள் கர்நாடகாவில் வாழ்கிறார்கள். ஆயிரக்கணக்கான கர்நாடக மக்கள் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள். நித்தம் நித்தம் போக்குவரத்து இருக்கிறது. எனவே அண்டை மாநிலங்களாக இருக்கக் கூடிய இரு மாநிலங்களும் நட்பும் பாசத்தோடும் இருந்தால்தான் ஆங்காங்கே மாநிலம் விட்டு மாநிலம் சென்று வாழ்பவர்களும் பயமின்றி வாழ முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications