கூடை கூடையாக மீனை அள்ளிய மக்கள்.. சென்னை காசிமேடு, கடலூரில் அர்த்த ராத்திரியில் "குதித்த" மீன்கள்
சென்னை: கார்த்திகை மாதம் விரதம் ஆரம்பமாகியிருக்கும் நிலையில், தமிழகத்தின் மீன் மார்க்கெட்டுகளில் விலைகள் குறைந்து காணப்பட்டன.. இதனால், மீன்பிரியர்கள் அதிக அளவிலான மீன்களை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றார்கள்.
சென்னை காசிமேட்டில், 1000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும், 700-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் மீன்பிடி தொழிலில் தினந்தோறும் ஈடுபட்டு வருகின்றன.. எனினும், வாரஇறுதி விடுமுறைகளை கணக்கிட்டு, முன்கூட்டியே மீன்பிடிக்க செல்வது மீனவர்களின் வழக்கமாக இருந்து வருகிறது.

காசிமேடு: வார நாட்களில் கடலுக்கு செல்லும் மீனவர்கள், சனிக்கிழமை நள்ளிரவுகளில் மீனவர்கள், விதவிதமான மீன்களுடன் கரை திரும்புவார்கள்.. இதனால், ஞாயிறு மட்டுமல்லாமல், விடுமுறை நாட்களிலும் காசிமேடு மீன்பிடி சந்தையில் திருவிழா போல கூட்டம் காணப்படும்.
எனினும், ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் காசிமேடு வியாபாரமின்றி காணப்படும்.. தமிழகத்தில் பெரும்பாலானோர் அசைவம் தவிர்த்து, சைவம் மட்டுமே இந்த புரட்டாசியில் சாப்பிடுவார்கள். இந்த ஒரு மாதத்துக்கு மீன்கள் உட்பட இறைச்சியை சாப்பிடாத காரணத்தினால், மீன்கள் விலை குறைந்து காணப்படும். இதனால் மீன்பிரியர்களுக்கு மகிழ்ச்சி என்றாலும், மீனவர்களுக்கும், மீன் வியாபாரிகளுக்கும் லாபம் கிடைப்பதில்லை.
விரதம் ஆரம்பம்: புரட்டாசியை போலவே, கார்த்திகை மாதத்திலும் பலர் அசைவ உணவுகளை தவிர்ப்பார்கள்.. கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் சபரிமலை ஐயப்ப சுவாமியை வேண்டி மண்டல பூஜைக்காக மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குவது வழக்கம்.
இதையடுத்து ஐயப்ப பக்தர்கள் கோவிலில், மாலை அணிவித்து நேற்றுமுன்தினம் விரதத்தை தொடங்கியிருக்கிறார்கள்.. விரதம் நாட்களில் அசைவ உணவுகளை தவிர்த்துவிடுவதால், கார்த்திகை மாதம் பிறப்பால் மீன்கள் விலையும் கடந்த வாரத்தை விட குறைந்து காணப்பட்டது.
இறால் மீன்கள்: கடந்த வாரம் வஞ்சிரம் மீன் கிலோ ரூ.1000க்கு விற்கப்பட்டது. ஆனால், நேற்று ரூ.800க்கு விற்கப்பட்டது. வெள்ளை வவ்வால் கிலோ ரூ.1100லிருந்து ரூ.900, கொடுவா ரூ.600லிருந்து ரூ.400, சங்கரா ரூ.450லிருந்து ரூ.350, இறால் ரூ.500லிருந்து ரூ.350 ஆகவும் விலை குறைந்து காணப்பட்டது. நண்டு விலை கிலோ ரூ.500லிருந்து ரூ.300 ஆக குறைந்திருந்தது..
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று அதிகாலை முதலே மீன்பிரியர்கள் அதிகளவில் குவிந்து மீன்களை வாங்க துவங்கினார்கள்.. வஞ்சிரம், கொடுவா, பாறை உள்ளிட்ட மீன்கள் வரத்தும் அதிகமாகவே காணப்பட்டது. விலைகள் அனைத்துமே குறைந்திருந்ததால், அதிக அளவில் மக்கள் மீன்களை வாங்கி சென்றார்கள்.
கடலூர் துறைமுகம்: கடலுர் மீன்பிடி துறைமுகத்தில், வியாபாரிகள், பொதுமக்களின் கூட்டம் குறைவாக இருந்ததால், மீன்களும் வழக்கமான விலையிலிருந்து 35 சதவீதம் வரை குறைவாக விற்பனை செய்யப்பட்டன. இங்கு ரூ.8900 வரையில் விற்பனை செய்யப்படும் 1 கிலோ வஞ்சிரம் மீன் ரூ.650க்கு விற்பனையானது. 1 கிலோ தேங்காய் பாறை ரூ.200, இறால் ரூ.200, சங்கரா ரூ.250, கொடுவா ரூ.500க்கு விற்பனை ஆனது.
தூத்துக்குடி திரேஸ்புரத்தில் உள்ள நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் வாடிக்கையாளர்கள் கூட்டம் குறைந்தது.ஏற்கனவே மழையால் குறைவாகவே நாட்டுப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வரும் நிலையில், தற்போது மீன்களின் விலையும் கணிசமாக குறைந்தது.
தூத்துக்குடி மீன்கள்: வழக்கமாக ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சீலா மீன்கள், ஒரு கிலோ 800 ரூபாய் வரை விற்பனையானது. 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் விளைமீன் 350 ரூபாய்க்கும், ஊளி மீன், பாறை மீன் உள்ளிட்டவை 300 ரூபாய்க்கும் விற்பனையானது. அதே போல் சாளை மீன் ஒரு கூடை 700 ரூபாய் வரையிலும், வங்கனை ஒரு கூடை ஆயிரம் ரூபாய் வரையிலும், வாளை மீன் கிலோ 120 ரூபாய் வரையிலும் விற்கப்பட்டது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு












Click it and Unblock the Notifications