"கருணாநிதி".. யாரந்த பிரபலம்?.. என்னாது "கலைஞர் தண்ணீரா".. கண்கொத்தி பாம்பாக பாஜக.. திமுக விடாது போல
சென்னை: ஆவின் குடிநீர் விவகாரம் தலைதூக்கியிருக்கிறது.. திமுக அரசு இதை செயல்படுத்துவதில் மும்முரம் காட்டி வரும்நிலையில், அது தொடர்பான பல்வேறு தகவல்களும் கசிந்து கொண்டிருக்கின்றன.
ஆவின் மூலம் குறைந்த விலையில் குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய திமுக அரசால் முடிவெடுக்கப்பட்டுள்ளது.. 1 லிட்டர், அரை லிட்டர் பாட்டில்கள் மூலம் குடிநீர் விற்க திட்டமிட்டுள்ளது ஆவின்.

கடந்த அதிமுக ஆட்சியில், அம்மா குடிநீர் திட்டம் அமலில் இருந்தது. தமிழக அரசின் போக்குவரத்துத் துறை சார்பில் ஒவ்வொரு பஸ் ஸ்டாண்டுகளிலும், அம்மா குடிநீர் பாட்டில்கள் விற்கப்பட்டன. இது, பொதுமக்களின் வரவேற்பை பெரிதும் ஈர்த்தது.
தண்ணீர் பாட்டில்: அந்த குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்ய பேருந்து நிலையங்களையும் பேருந்து நிறுத்தங்களையும் தேர்வு செய்ததை கண்டு அதிகாரிகளை பாராட்டினார் அன்றைய முதல்வர் ஜெயலலிதா.. அதற்கேற்ப பொதுமக்களும் அம்மா குடிநீரை தேடி அலையவில்லை. பேருந்து நிலையங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும் குடிநீர் பாட்டில்களை வாங்கிச்செல்வது எளிதாக இருந்தது... தட்டுப்பாடில்லாமல் வெகுசாதாரணமாக மக்களுக்கு கைகளில் கிடைத்ததுதான், இந்த திட்டம் மிகுந்த வரவேற்பை பெற முக்கிய காரணமாக இருந்தது.
ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த திட்டம் கைவிடப்பட்டது... இது சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான், இந்த திட்டத்தை ஆவின் மூலம் நடைமுறைப்படுத்த முடிவு செய்து அதற்கான உத்தரவுகள் அரசு சார்பில் பிறப்பிக்கப்பட்டன.
குடிநீர் ஆலை: இந்த திட்டத்திற்கான டெண்டர் அறிவிப்புகள் விரைவில் வரவிருக்கிறது... இந்த டெண்டர் கோரும் குடிநீர் ஆலை அனைத்து சட்டப்பூர்வ உரிமங்களுடன் அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளின்படி பராமரிக்கப்பட வேண்டும் என்றும் ஒப்பந்தம் எடுப்பவரிடம் தேவையான அளவுக்கு குடிநீர் ஆலைகள் மற்றும் இயந்திரங்கள் இருக்க வேண்டும் என்றும் டெண்டர் விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது..
இதனிடையே இந்த விஷயத்தில் தமிழக பாஜக தலையிட்டுள்ளது.. இது தொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு முக்கிய கேள்வியையும் எழுப்பி உள்ளார்.. "கடந்த ஆட்சியில் 2014 - 15ம் ஆண்டு குறைந்த விலையில் குடிநீர் விற்பனை செய்வதாக அறிவித்தபோது, அதை இலவசமாக வழங்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியதுடன், குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதை அரசே விற்பனையில் ஈடுபடக்கூடாது என போராட்டமும் நடத்தினார். ஆனால், இப்போது, ஆவின் நிறுவனம் வழியே குடிநீர் விற்கப் போவதாக அறிவித்திருப்பது திமுகவினர் பலன் பெறுவதற்கோ? என்ற சந்தேகம் எழுகிறது.
சந்தேகம் கிளம்புகிறது: குடிநீருக்கு வரி செலுத்தும் மக்கள் சரியான முறையில் குடிநீர் வினியோகமின்றி அவதியுறுவதற்கு தீர்வு காணாமல், குடிநீர் விற்பனையில் அரசு ஈடுபடுவதாக அறிவித்திருப்பது எந்த வகையில் நியாயம்? அதனால், உடனடியாக அனைத்து மக்களுக்கும் சரியான சுத்தமான குடிநீர் வினியோகத்தை உறுதி செய்ய கவனம் செலுத்த வேண்டும், தங்கள் கட்சியினர் சம்பாதிப்பதற்கு புதிய புதிய திட்டங்களைக் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும்" என்று வெளிப்படையாகவே கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, ஆவின் டெண்டர் குறித்த ரகசிய தகவல்கள் அனைத்தையும் பாஜக அண்ணாமலைக்கு அதிகாரிகள் தரப்பிலிருந்து கசியவிடப்பட்டிருக்கிறதாம்.. அவரும் "டெண்டர் அறிவிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டும், அப்போது இதில் நடந்துள்ள முறைகேடுகளை அம்பலப்படுத்தலாம்.. அதுவரை இது தொடர்பான ஆதாரங்களை சேகரித்து வைத்துக் கொள்ளலாம்" என்று முடிவு செய்துள்ளாராம்.. மேலும், இது தொடர்பான "மூவ்"களை ரகசியமாக கண்காணித்து வருகிறாராம் அண்ணாமலை.
அரை லிட்டர் பாட்டில்: எனினும், திமுக அரசு இந்த தண்ணீர் விநியோகத்தை அமல்படுத்துவதில் மும்முரமாகி வருவதாக தெரிகிறது.. அதாவது ஒரு லிட்டர் அரை லிட்டர் குடிநீர் பாட்டில்களை தினசரி ஒரு லட்சம் விற்க திட்டமிடப்பட்டு உள்ளதாம்.. மேலும், ஆளும் கட்சியின் தலைமைக்கு மிக நெருக்கமான ஒருவருக்கு இந்த குடிநீர் டெண்டரை ஒதுக்கீடு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்து விட்டதாகவும் சொல்கிறார்கள்.. ஆனால் அந்த முக்கிய புள்ளி யார் என்று தெரியவில்லை..
டெண்டரில் அந்த நபர் சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு சட்டவிதிகளின் படி முறையாக கிடைக்கும் வகையில், டெண்டர் விதிகள் உருவாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. எப்படி பார்த்தாலும் ஆளும் கட்சிக்கு நெருக்கமானவருக்கே இந்த டெண்டர் கிடைக்கவிருப்பதாக தெரிகிறது.. மற்றொருபுறம், குடிநீர் திட்டத்துக்கு கலைஞர் பெயரை வைப்பதா ? அல்லது ஆவின் பெயரையே வைப்பதா? என்று அரசிடம் கேட்டுள்ளதாம் ஆவின் நிர்வாகம்.
வருகிற ஜுன்-3ம் தேதி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் ஆகும்.. இந்த நாளை பெருமைப்படுத்தும் வகையில் ஏதேனும் புதிய அறிவிப்பை அறிவிக்க விரும்புகிறாராம் முதல்வர் ஸ்டாலின்.. இது குறித்து, ஓய்வு பெற்ற திமுக ஆதரவு ஐஏஎஸ் அதிகாரிகளிடமும் சமீபத்தில் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.. அப்போது, மதுவிலக்கை அமல்படுத்தலாம், வரலாற்றிலும் பெண்களிடமும் உங்கள் பெயர் நிலைத்து நிற்கும் என்று அதிகாரிகள் சொல்லி உள்ளார்கள்.
கலைஞர் குடிநீரா: மேலும், எந்தெந்த வகையில், எந்தெந்த துறையின் மூலம் அரசு வருவாயை பெருக்க முடியும் என்ற புள்ளி விபரங்களையும் அதிகாரிகள் முதல்வரிடம் தெரிவித்தார்களாம்.. அந்தவகையில், மதுவிலக்கு தொடர்பாக ஏதாவது அறிவிப்புகள், கருணாநிதி பிறந்தநாள் தினத்தன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், ஆவின் தண்ணீர் பாட்டிலுக்கும் கலைஞர் பெயரை சூட்டுவார்களா? என்றும் எதிர்பார்ப்பகள் எகிறி வருகின்றன...!!
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications