"தயாளு யாராவது வந்து என்னை எங்கே என கேட்டால்"... மீண்டும் வைரலாகும் அந்த போட்டோ!

கருணாநிதி தயாளு அம்மாளுடன் சேர்ந்து நிற்கும் போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தயாளு யாராவது வந்து என்னை கேட்டால்..." என்ற வரிகளுடன் கூடிய போட்டோ ஒன்று இணையத்தில் மறுபடியும் வைரலாகி வருகிறது.

சோஷியல் மீடியா முழுவதுமே இன்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் போட்டோக்கள்தான் நிரம்பி வழிகின்றன.. தன்மான தலைவரின் புகழ், அருமை, குறித்த வரிகளை பதிவிட்டு தொண்டர்கள் புளங்காகிதம் அடைந்தும் வருகின்றனர்.

அந்த வகையில் ஒருபோட்டோ மறுபடியும் வைரலாகி வருகிறது... கருணாநிதி இறந்தபோது இந்த போட்டோவைதான் பலரும் ஷேர் செய்தனர்.. இப்போதும் தொண்டர்கள் அதையே எடுத்து பதிவிட்டு கொண்டுள்ளனர்.

karunanidhi: dhayalau ammal and karunanidhi photo goes viral on socials

அந்த படம் கருணாநிதி - தயாளு அம்மாள் இருவரும் உள்ள போட்டோ.. தயாளு அம்மாள் தன் வீட்டின் கதவோரத்தில் நின்று கொண்டிருக்கிறார்.. கருணாநிதி வெளியில் எங்கோ கிளம்பி செல்கிறார் போலும்.. அவரை வழி அனுப்ப தயாளு அம்மாள் அங்கே நின்றிருக்கிறார் என தெரிகிறது.

இதை ஒரு தொண்டர் பதிவிட்டு "தயாளு செல்கிறேன், அன்பு உடன்பிறப்புக்கள் யாரேனும் வந்து, என்னை எங்கே? என்று கேட்டால். அண்ணாவை காண சென்றுவிட்டேன்..என்று கூறு. #கருணாநிதி" என்று உருக்கத்துடன் தெரிவித்திருந்தார்.

இந்த படம் கருணாநிதி இறந்தபோது எல்லார் மனசையும் உலுக்கி எடுத்தது.. கூடவே அந்த வரிகளும் அனைவர் மனசையும் பிசைந்தெடுத்து விட்டது.. இப்பேதாது மறுபடியும் இதை தொண்டர்கள் ஷேர் செய்து வருகிறார்கள்.. இப்போதும் அப்படியே ஒரு உணர்வை தந்து வருகிறது.

அந்த வரிகளும், போட்டோவும் பல்லாயிரக்கணக்கான அர்த்தங்களை சொல்கிறது.. எண்ணற்ற துயரங்களை கொண்டு வந்து கொட்டி செல்கிறது.. அத்துடன் ஏனோ மனதையும் சேர்த்து பிசைந்து எடுத்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+