கருணாநிதியின் கோபாலபுரம் வீடு! அமெரிக்காவிலிருந்து வந்து சுற்றிப்பார்த்த முதல் உரிமையாளர் பேத்தி!
சென்னை: கடந்த 1955ஆம் ஆண்டு கருணாநிதிக்கு கோபாலபுரம் வீட்டை விற்ற, அதன் முதல் உரிமையாளரின் உறவினர்கள் அமெரிக்காவிலிருந்து வந்து தங்கள் தாத்தா கட்டிய இல்லத்தை சுற்றிப்பார்த்து நெகிழ்ந்தனர்.
முதலமைச்சர் ஸ்டாலினும் பெருந்தன்மையாக அவர்களை கோபாலபுரம் இல்லத்திற்குள் ஒவ்வொரு இடமாக அழைத்துச் சென்று சுற்றிக்காட்டி மகிழ்ந்தார்.
இதனால் நெகிழ்ச்சி அடைந்த அவர்கள், வீடு அப்படியே இருப்பதாகவும் முதல்வரே நேரடியாக வந்து தங்களை சுற்றிக்காட்டியது வியப்பை தருவதாகவும் கூறியிருக்கிறார்கள்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

பலரது கனவு
''வீடு என்பது பலரது கனவு!கனவு இல்லத்தைச் சம்பாதிக்கும்போது நாம் அடையும் மகிழ்ச்சி அளவிட முடியாதது! நம்மோடும் நம் குடும்பத்தோடும் உறவாகி, நம் அடையாளமாகவே வீடுகள் மாறிவிடுகின்றன.எங்கள் குடும்பத்தின் அடையாளம் கோபாலபுரம் வீடு!தலைவர் கலைஞர் திரைத்துறையில் வெளிப்படுத்திய எழுத்தாற்றலின் வெகுமதியே கோபாலபுரம் வீடு.''

கோபாலபுரம் வீடு
''இந்த வீடு, எங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல, இன்னொரு குடும்பத்துக்கும் உறவாகி இருந்தது. தலைவர் கலைஞர் கோபாலபுரம் வீட்டை திரு. சரபேஸ்வரர் அவர்களிடம் 1955-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வாங்கினார். அதே ஆண்டு ஜூன் மாதத்தில் அவரது பேத்தியின் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வீட்டை விலைக்கு வாங்கியிருந்தாலும், சரபேஸ்வரர் தனது பேத்தியின் திருமணத்தைக் கோபாலபுரம் வீட்டிலேயே நடத்திட ஒப்புக்கொண்டார் தலைவர் கலைஞர்.''

நட்புப் பாலமாய்
''அன்று தனக்குத் திருமணமான கோபாலபுரம் வீட்டைக் காண, அமெரிக்காவிலிருந்து திரும்பிய திருமிகு. சரோஜா சீதாராமன் அவர்கள் விரும்பியதை ஊடகங்கள் வழியே அறிந்தேன். அவரது குடும்பத்தினரைக் கோபாலபுரம் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். இரு குடும்பங்களுக்கும் உறவான வீடு நட்புப் பாலமாய் உயர்ந்து நின்று எங்களை அன்போடு பார்த்தது.'' இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

நெகிழ்ச்சி பதிவு
இதனிடையே கோபாலபுரம் இல்லத்தை சுற்றிப்பார்த்தது பற்றி நெகிழ்ச்சியுடன் கூறும் சரபேஸ்வரரின் பேத்தி சரோஜா சீதாராமன், தங்களை முதலமைச்சரே நேரில் வந்து வீட்டை சுற்றிக்காட்டியது மகிழ்ச்சி தருவதாகவும் முதல்வர் குடும்பத்தினரை அமெரிக்காவில் உள்ள தங்கள் வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications