கருணாநிதியின் புகைப்படத்தை பார்த்ததும்! ஜெனீவாவில் கூட்டமாக எழுந்து நின்று கை தட்டியது ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் மறைந்த முதல்வர் கருணாநிதியால் இலவசமாக காக்ளியர் இம்பிளான்ட் சிகிச்சை திட்டம் மூலம் ஏராளமான குழந்தைகளுக்கு வாய் பேச வைத்து, காது கேட்க வைக்கப்பட்டதாக டாக்டர் மோகன் காமேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து காது, மூக்கு, தொண்டை நிபுணர் மோகன் காமேஸ்வரன் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகள் என்றால் கருணாநிதி அவர்களுக்காக உயிரையே விடுவார். ஒரு முறை அவரை பார்க்க சென்றேன்.

karunanidhi chennai

அப்போது அவர்," என்கிட்ட எதையுமே கேட்க மாட்டேங்கிறீரே" என கேட்டார். அதற்கு நான் எனக்கு ஒன்று வேண்டும் அய்யா, ஆனால் உங்களிடம் கேட்க பயமாக இருக்கிறது என்றேன். அதற்கு அவர் "பரவாயில்லை சொல்லுங்கள்" என்றார். அப்போது நான் எனக்கு Cochlear plant வேண்டும் என்றேன். அதற்கு அவர் அப்படி என்றால் என்ன என கேட்டார்.

உடனே என்னிடம் இருந்த லேப்டாப்பில் ஒரு வீடியோவை அவரிடம் காட்டினேன். அதில் ஒரு வாய் பேச முடியாத குழந்தை, சைகை மொழியின் மூலம் காலை முதல் பள்ளிக்கு சென்றுவிட்டு வந்தது வரை என்ன நடந்தது என கூறினார். இன்னொரு வீடியோவில் ஒரு சிறுவன் அவனுடைய அம்மாவிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தான்.

இந்த இரு வீடியோக்களையும் காட்டி, இரு குழந்தைகளுமே பிறவியிலிருந்தே வாய் பேச முடியாதவர்கள். ஒரு குழந்தைக்கு காக்லியர் இம்ப்ளான்ட் செய்து பேச வைத்துவிட்டோம். இன்னொரு குழந்தைக்கு செய்ய முடியவில்லை என்றேன். அதற்கு அவர் ஏன் என்றார். நான் பணம் இல்லை என்றேன்.

ஒரு காக்லியர் பிளான்ட் வைக்க எவ்வளவு செலவாகும் என கேட்டார். அதற்கு நான் 6 லட்சம் ஆகும் என்றேன். அவ்வளவுதானே செய்துவிடுங்கள் என்றார், அதற்கு நான் பணம் கொடுங்கள் என்றேன். கொடுக்கிறேன் நீங்கள் பண்ணுங்கள் என்றார்.

ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த குழந்தைகளும் பேசவும், செவிதிறனும் பெறும் வகையில் காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சையை கட்டணமின்றி இந்தியாவில் முதல்முறையாக கருணாநிதி அறிமுகம் செய்தார். இதன் மூலம் தமிழகத்தில் 2000 குழந்தைகளுக்கு தமிழகத்தில் காக்ளியர் பிளான்ட் செய்யப்பட்டுள்ளது.

இந்த இம்ப்ளான்ட் குறித்து ஜெனீவாவில் என்னை பேச அழைத்தார்கள். நான் சென்று அவருடைய புகைப்படத்தை திரையிட்டேன். குழந்தைகளுக்கு இலவசமாக காக்ளியர் இம்பிளான்ட் செய்வதற்கு காரணமே இந்த மனிதர்தான் என்றேன். அங்கிருந்தவர்கள் எல்லாம் எழுந்து நின்று கை தட்டினர்.

மருத்துவமனைகளை கட்டி வைத்துள்ளீர்களே உங்கள் பிள்ளைகள் யாருமே மருத்துவராகவில்லையே என கருணாநிதி கேட்டார். அதற்கு நான் மருத்துவமனையை எனக்காக கட்டினேன். என் பிள்ளைகளுக்காக அல்ல! பெற்றால்தான் பிள்ளையா, என் ரத்த சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு இல்லாவிட்டாலும் என் அறிவு குழந்தைகளுக்கு இந்த மருத்துவமனையை கொடுத்துவிடுவேன் என்றேன்.

ஒரு முறை எனக்கு 60 ஆவது பிறந்தநாள் அன்று ,நானும் என் மனைவியும் அவரிடம் ஆசிர்வாதம் வாங்க சென்றேன். கருணாநிதிக்கு என் பிறந்தநாள் என்பது தெரியாது என நான் நினைத்தேன். அங்கு போய் நான் சொன்னதும் எனக்கு வாழ்த்துகளை சொன்னார், பிறகு ஒரு பரிசை என்னிடம் கொடுத்தார். அதை பிரித்து பார்த்த போது அதில் விலை மதிப்புள்ள வாட்ச் இருந்தது. உடனே அய்யா இதெல்லாம் எனக்கு வேண்டாம், உங்கள் அன்பும் பாசமும் இருந்தால் போதும் என்றேன். அதற்கு என் கையை பிடித்துக் கொண்டு 2 மாதத்திற்கு முன்பு என்ன சொன்னீர்கள்? பெற்றால்தான் பிள்ளையா என்றுதானே ? என என்னிடம் கேட்டார். இவ்வாறு டாக்டர் மோகன் காமேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+