சென்னையில் அசத்தல்.. கின்னஸ் சாதனை படைத்த திமுகவின் கருணாநிதி நினைவு மாரத்தான்.. எப்படி தெரியுமா?
சென்னை: சென்னையில் இன்று அதிகாலையில் நடந்த கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டி கின்னஸ் சாதனை படைத்து அசத்தி உள்ள நிலையில் அதுபற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை திமுக கொண்டாடி வருகிறது. இதன் ஒருபகுதியாக சென்னையில் இன்று கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

மொத்தம் 4 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. 5 கிமீ, 10 கிமீ, 21 கிமீ, 42 கிமீ என்ற அளவில் தனித்தனியே மாரத்தான் போட்டி நடந்தது. இந்த போட்டியை அமைச்சர்கள் கேஎன் நேரு, உதயநிதி ஸ்டாலின் பச்சை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் இருந்து போட்டி தொடங்கியது. அதன்பிறகு காமராஜர் சாலை, கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம், முத்து லெட்சுமி பார்க், பெசன்ட் நகர், இந்திரா நகர், ஓ.எம்.ஆர்.சாலை, வாலாஜா சாலை, சிவானந்தா சாலை வழிகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசு வழங்கினார்.
42 கிமீ, 21 கிமீ பிரிவில் ஓடி வென்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2ம் பரிசாக ரூ.50 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது. 10 கிமீ பிரிவில் முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.25 ஆயிரம், 3ம் பரிசாக ரூ. 15 ஆயிரம் வழங்கப்படுகிறது. 5 கிமீ பிரிவில் வென்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.15 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.

இதற்கிடையே இந்த போட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கான சான்றிதழ் பரிசு வழங்கும் விழாவின்போது முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. அதாவது இந்த கருணாநிதி நூற்றாண்டு மாரத்தான் போட்டியில் இந்த ஆண்டு முன்பதிவு கட்டணமாக ரூ.3.42 கோடி கிடைத்த நிலையில் போட்டியில் அரசு அதிகாரிகள், திருநங்கைகள், ஆண்கள், பெண்கள், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என 73,206 பேர் பங்கேற்று இலக்கை நோக்கி ஓடினர்.அந்த வகையில் கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியால் இன்று சென்னை மெரினா கடற்கரை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. பரிசு வழங்கும் விழாவில் மூத்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் என ஏராளாமனவர்கள் பங்கேற்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வரும் நடிகர் தனுஷ்? மறுக்காத தந்தை கஸ்தூரி ராஜா.. கவனம்பெற்ற பதில் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications