சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜெர்மனியில் ராஜாத்தி அம்மாள்! சிகிச்சையை ஆரம்பித்த மருத்துவர்கள்! கவனமாக பார்த்துக்கொள்ளும் கனிமொழி!

Google Oneindia Tamil News

சென்னை: கருணாநிதியின் மனைவியும் கனிமொழி எம்.பியின் தாயாருமான ராஜாத்தி அம்மாளுக்கு ஜெர்மனியில் உள்ள University Hospital Bonn -ல் சிகிச்சையை தொடங்கினார்கள் மருத்துவர்கள்.

செரிமான மண்டலத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த சில மாதங்களாக சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் ராஜாத்தி அம்மாள் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெர்மனியில் ராஜாத்தி அம்மாளை உடனிருந்து கவனித்து வரும் கனிமொழி வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தமிழகம் திரும்புகிறார்.

இன்னும் 3 வருஷம்தான்.. நாடு முழுக்க வருகிறது 5ஜி சேவை.. அஸ்வினி வைஷ்ணவ் உறுதிஇன்னும் 3 வருஷம்தான்.. நாடு முழுக்க வருகிறது 5ஜி சேவை.. அஸ்வினி வைஷ்ணவ் உறுதி

 ராஜாத்தி அம்மாள்

ராஜாத்தி அம்மாள்

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவியும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாள் செரிமான மண்டலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த சில மாதங்களாக அவஸ்தை பட்டு வருகிறார். திட உணவுகள் செரிப்பதற்கு சிரமமாக இருந்ததால் திரவ வழி ஆகாரங்களை மட்டுமே அவர் உட்கொண்டு வந்தார்.மேலும் வயது மூப்பு காரணமாக இன்னும் பல உடல் உபாதைகளால் மருந்து உட்கொண்டு வந்தார்.

ஜெர்மனில் சிகிச்சை

ஜெர்மனில் சிகிச்சை

இதனிடையே சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜாத்தி அம்மாளை தற்போது உயர் சிகிச்சைக்காக ஜெர்மனி அழைத்துச் சென்றிருக்கிறார் கனிமொழி எம்.பி. இதற்காக வியாழன் இரவு சென்னையிலிருந்து ராஜாத்தி அம்மாளுடன் ஜெர்மனி புறப்பட்ட கனிமொழி நேற்று பிற்பகல் ஜெர்மனியை அடைந்திருக்கிறார். அங்குள்ள பிரபல மருத்துவமனையான University Hospital Bonn -ல் ராஜாத்தி அம்மாளுக்கு சிகிச்சைகள் தொடங்கிவிட்டன.

 உயர் சிகிச்சை

உயர் சிகிச்சை

ராஜாத்தி அம்மாளை ஜெர்மன் அழைத்துச் செல்லும் தகவலை தகவலை முறைப்படி திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினிடம் கனிமொழி தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் தாம் வெளிநாடு செல்லும் தகவலை நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவிடமும் கனிமொழி தெரியப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெர்மனி செல்ல ராஜாத்தி அம்மாள் மிகுந்த தயக்கம் காட்டிய நிலையில் கனிமொழி தான் அவரை வலியுறுத்தி சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்து அழைத்துச் சென்றிருக்கிறார்.

 அம்மாவை கவனிக்க

அம்மாவை கவனிக்க

தனது தொகுதிப்பணி, கட்சிப்பணி என அனைத்தையும் அடுத்த 20 நாட்களுக்கு ஒத்தி வைத்துவிட்டார் கனிமொழி. அம்மாவுடன் இருந்து அவரை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்ளும் கனிமொழி, வரும் செப்டம்பர் 15ஆம் தேதி ஜெர்மனியில் இருந்து தமிழகம் திரும்புவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

English summary
கருணாநிதியின் மனைவியும் கனிமொழி எம்.பியின் தாயாருமான ராஜாத்தி அம்மாளுக்கு ஜெர்மனியில் உள்ள University Hospital Bonn -ல் சிகிச்சையை தொடங்கினார்கள் மருத்துவர்கள்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X