கருணாஸ் காட்டில் மழை தான்.. கடைக்கண் பார்வையை திருப்பிய ஸ்டாலின்! கண்டிப்பா அங்க தான் போட்டியாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக கூட்டணியில் புதிதாக இணைந்திருக்கும் முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கு ஒரு சீட்டு தருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார் எனவும் கட்சியின் தலைவரான நடிகர் கருணாஸ் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட இருப்பதாக கூறியுள்ளார்

2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் வட்டாரத்தில் புதிய கூட்டணி வாய்ப்புகள் குறித்து பரபரப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி இணைந்துள்ளது.

இந்த நிலையில், முக்குலத்தோர் புலிப்படை கட்சி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அக்கட்சியின் தலைவரான கருணாஸ் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக கூட்டணி

முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரும் நடிகருமான கருணாஸே இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் பேசிய கருணாஸ் தங்களது கட்சிக்கு ஒரு சீட்டு வழங்கப்படும் என்றும், அந்தத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலேயே தான் போட்டியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து அவர் தெளிவாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கருணாஸ்

நடிகர் கருணாஸ் கடந்த சில ஆண்டுகளாக திமுகவுடன் நெருக்கம் காட்டி வந்தார். குறிப்பாக திமுக இளைஞர் அணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் உடன் அவர் தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. திமுகவின் பல்வேறு பொதுக்கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கருணாஸ் கலந்து கொண்டார். இதன் மூலம் திமுகவுடன் அவரின் அரசியல் நெருக்கம் வெளிப்படையாக தெரிந்தது. அதே சமயம், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது அவர் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்து வந்தார்.

முக்குலத்தோர் புலிப்படை

இதற்கு முன்பு, 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. அப்போது இரட்டை இலை சின்னத்தில் திருவாடனை தொகுதியில் போட்டியிட்ட கருணாஸ், சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன்பின் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் பின்னர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கருணாஸ் திமுக பக்கம் சாய்ந்தார்.

மு.க.ஸ்டாலின் முடிவு

2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது திமுக கூட்டணியில் இணைய கருணாஸ் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அப்போது திமுக தலைமையிலிருந்து அவருக்கு பெரிதாக முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. இதனால் அவர் கூட்டணியில் இடம் பெறவில்லை. அதன்பின்னர், உதயநிதி ஸ்டாலின் மூலம் திமுகவுடன் உறவை வலுப்படுத்தும் முயற்சியில் அவர் தொடர்ந்து ஈடுபட்டார். கடந்த சில ஆண்டுகளாக திமுக நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்றது, இப்போது கூட்டணியில் இணைவதற்கான அடிப்படையாக அமைந்துள்ளது.

உதயசூரியன் சின்னம்

இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி இணைந்திருப்பது குறிப்பிடத்தக்க அரசியல் முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என்ற உறுதி கிடைத்துள்ளதாக கருணாஸ் தெரிவித்திருப்பது, அந்தக் கட்சியின் ஆதரவாலர்கள் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரவிருக்கும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் கருணாஸ் போட்டியிடும் நிலையில் எந்த தொகுதியில் போட்டி என தெரியவில்லை. ஆனால், நிச்சயம் தென் மாவட்டங்கள் முக்குலத்தோர் வாக்குகள் அதிகமுள்ள தொகுதியில் தான் அவர் போட்டியிடுவார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+