"என்ன மிஸ்டர் திருமாவளவன்.. கூஜா தூக்குறீங்க".. வீடியோ போட்ட காயத்ரி.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்
விசிக திருமாவளவனுக்கு எதிராக காயத்ரி வீடியோ வெளியிட்டுள்ளார்
சென்னை: "என்ன மிஸ்டர் திருமாவளவன், நீங்க வேல் குத்தியிருக்கீங்களா? திமுகவுக்கு கூஜா தூக்குறீங்க. கைநீட்டி காசு வாங்குறீங்க" என்று விசிக தலைவரை காயத்ரி சீண்டி ஒரு வீடியோ போட்டுள்ளார்.. அதற்கு "புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்குமுன்னு கனவுல கூட நினைக்கல" என்று காயத்ரி ரகுராமை நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள்.
Recommended Video
சும்மா இருப்பவர்களை சீண்டி பார்ப்பார்களே.. அதைதான் காயத்ரி ரகுராம் செய்து வருகிறார்... தன்னை பிரபலப்படுத்தி கொள்ள, பிரபலமானவர்களுடன் மோதும் போக்கை கடைப்பிடிப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்துபவர்.

இவர் பாஜகவின் அபிமானி... ஆனால் அவர் கட்சியில் எந்த பொறுப்பிலும் அவர் இல்லை என்று ஒருமுறை தமிழிசை சவுந்தராஜனே தெரிவித்திருந்த நிலையில், இப்போது புதிய பொறுப்பு தரப்பட்டு விட்டது.. இவருக்கு பொறுப்பு தந்தாலும் சரி, தராவிட்டாலும் சரி, ஒரே குறிக்கோள் விடுதலை சிறுத்தைகள் கட்சிதான்.. பெரும்பாலான ட்வீட்களும் அந்த கட்சியினரை சார்ந்துதான் இருக்கும்.
"சரக்கு மிடுக்கு" என்று எச்.ராஜா எப்போதாவது சொன்னால், விடாமல் இன்னமும் விமர்சித்து வருபவர் காயத்ரி ரகுராம்தான்.. ஒருமுறை திருமாவை ஜோக்கர் என்றுகூட சொன்னார்.. இப்போது கறுப்பர் கூட்டம் குறித்த விவகாரம் சோஷியல் மீடியாவில் பரபரப்பாகி வருகிறது.. இதற்கு திருமாவளவன் ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார்.
அதில், "ஒரு பிராமணர் கூட பழனிக்கோ திருத்தணிக்கோ அலகு குத்தியோ, காவடி எடுத்தோ சென்றதுண்டா? இன்று ஹெச். ராஜா போன்றவர்களேல்லாம் முருகருக்காக வரிந்துக்கட்டி வருகிறார். தமிழ் கடவுள் முருகரை பற்றி கவலைப்பட தமிழர்கள் வரட்டும். ஹெச். ராஜா வரக்கூடாது. அந்த யூடியூப் சேனலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
அநாகரீகமான அறுவருப்பான அரசியலை கைவிட வேண்டும். உங்களுக்கு முருகன் அருள்புரிவார் என்றால் பச்சை தமிழர்களான எங்களுக்கும் முருகர் துணை புரிய வரமாட்டாரா. ஒரு பிராமணர் கூட தங்களின் குழந்தைக்கு முருகன் என பெயர் வைத்தது இல்லை.
முருகன் தமிழ்கடவுள் என்றால் விநாயர் தமிழ் கடவுள் இல்லையா என்ற கேள்வி எழுகிறது. சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்த முருகன் தமிழ் கடவுள் என்றால் சிவன் தமிழ்கடவுள் இல்லையா? முருகன் மட்டும் தமிழுக்கு கடவுளா? ஏன் சிவனை தமிழ் கடவுளை என சொல்வதில்லை" என்றெல்லாம் பேசியிருந்தார்.
இந்த விவகாரம் தமிழகத்தில் வெடித்து இத்தனை நாட்களாகியும் எதற்குமே வராத காயத்ரி, திருமா என்றவுடன் வரிந்து கட்டிக் கொண்டு வந்து வீடியோ போட்டுள்ளார்.. அதில், "என்ன மிஸ்டர் திருமாவளவன், நீங்க வேல் குத்தியிருக்கீங்களா வேல் ? இல்ல பால் காவடி எடுக்குறீங்களா?. நீங்க திமுகவுக்கு கூஜா தூக்குறீங்க. கைநீட்டி காசு வாங்குறீங்க. அதுக்காக நீங்க சொல்றது எல்லாம் சரியாகிடுமா? நாங்க குற்றச்சாட்டு வைக்கிறோம்.
நாங்க ஏன் உங்கள நம்பனும். சுரேந்திரர் மற்றும் நடராஜை பக்கத்தில் வைத்து போட்டோ எடுத்துக்குறீங்க. அவங்க இரண்டு பேரும் திமுகவுக்கு பிரச்சாரம் பண்ணியிருக்காங்க. நாங்க என்ன இழிச்சவாயா. பிராமணர்கள் சுப்ரமணியம் என பேர் வைக்கிறார்கள்.
— Gayathri Raguramm (@gayathriraguram) July 20, 2020
நாங்க முருகர் பெயரை தான் வைத்துள்ளோம். நீங்க சாமி பெயரை வைத்திருக்கிங்களா? தமிழ்நாடு கலாச்சாரத்தையும், கடவுளையும் பேசுர எந்த தகுதியும் உங்களுக்கு இல்லை! இதோட எதுவும் பேசாதீங்க நாங்க சும்மா இருக்கமாட்டோம்" என்று ஆவேசமாக கூறியுள்ளார்.. காயத்ரியின் இந்த வீடியோவுக்கு ஒருசிலர் ஆதரவு தெரிவித்தாலும், பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
திருமாவளவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், இப்படி தனிமனித தாக்குதலில் ஈடுபடுவது தவறு என்பதையே குறிப்பிட்டு வருகிறார்கள்.. "நீ காவடி எடுத்துருக்கியா அதுக்கு பதில் சொல்லுமா? படத்துல இல்லை நிஜத்துல..? புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்குமுன்னு கனவுல கூட நினைக்கல" என்று நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றி வருகிறார்கள்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications