தெறிச்சுடுவீங்க.. மிரண்டுடுவீங்க! ஆம்புலன்ஸ் அலறல் சத்தத்தை கூட கண்டுகொள்ளாமல் பேசிகொண்டிருந்த விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூரில் நேற்று விஜய் பிரச்சாரத்தில் நடந்த மிக மோசமான சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்தனர். இதற்கிடையே இந்தத் துயரச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பி வருகிறது. அதன்படி வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், ஆம்புலன்ஸ்கள் விஜய் முன்னாலேயே சைரன் சத்தத்துடன் போய் கொண்டு இருக்கிறது. ஆனாலும், விஜய் தொடர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டிருப்பது போல இருக்கிறது.

கரூர் மாவட்டத்தில் விஜய் நேற்றைய தினம் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். விஜய் மதியம் வருவதாகச் சொல்லப்பட்ட நிலையில், அவர் பல மணி நேரம் தாமதமாக இரவு தான் கரூருக்கு போனார். மாலை நேரம் என்பதால் அதிகளவில் கூட்டம் திரண்டிருந்தனர். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்த நிலையில், விஜய் பேச ஆரம்பித்தார்.

Karur campaign disaster Vijay Continue to speak despite multiple ambulances rushed in from of him

39 பேர் உயிரிழப்பு

ஆனால், கொஞ்ச நேரத்திலேயே நிலைமை கையை விட்டுச் சென்றது. கூட்ட நெரிசல் ஏற்பட வரிசையாகப் பலர் உயிரிழந்தனர். இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது. மேலும், பலர் காயமடைந்து தீவிரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கரூர் பேரழிவு தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பி வருகிறது. அப்படித் தான் ஒரு வீடியோவில் ஆம்புலன்ஸ்கள் விஜய் கண் முன்னே செல்லும் போதிலும் அவர் தொடர்ந்து பேசுவதைக் காண முடிகிறது.

பாடிக் கொண்டிருந்த விஜய்

ஒரு பக்கம் அங்கே மக்கள் அலறிக் கொண்டு இருக்க.. இன்னொரு பக்கம் விஜய் பிரச்சாரத்தில் பேசிக் கொண்டு இருந்தார். விஜய்க்கு கூட்டம் அளவு கடந்து செல்வது தெரிந்தாலும் இந்தளவுக்குக் கூட்ட நெரிசல் ஏற்பட்டதை அவர் உணரவில்லை. இரண்டாம் கட்ட தலைவர்களும் இதை உடனடியாக விஜய்யிடம் சொல்லவில்லை. இதனால் விஜய் பேசிக் கொண்டே இருந்தார். பாட்டிலுக்கு பத்து ரூபாய் எனப் பாடிக் கொண்டும் இருந்தார்.

மேலும், அப்போது விஜய் பேசும்போது அவருக்கு எதிரே தான் ஆம்புலன்ஸ் கடந்து செல்கிறது. அதைப் பார்த்த பிறகும் கூட விஜய் தனது பேச்சைத் தொடர்ந்தார். அந்த பக்கம் ஆம்புலன்ஸ்கள் சைரன் சத்தத்துடன் அலற, இந்த பக்கம்.. மக்கள் யூடியூப்பை பார்த்தால் தெசிஞ்சுடுவீங்க மிரண்டுடுவீங்க என விஜய் அரசியல் பேசிக் கொண்டு இருந்தார்.

அலறிய ஆம்புலன்ஸ்கள்

விஜய் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்ததால் ஒரு பக்கம் அவரது பேச்சைப் பலரும் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். இதனால் ஆம்புலன்ஸ்கள் விரைந்து செல்ல முடியவில்லை. தொண்டர்கள் அனைவரும் விஜய் பேச்சைக் கேட்டுக் கொண்டு இருந்ததால் ஆம்புலன்ஸ் மெல்ல ஊர்ந்து கொண்டே சென்றது. இதுவும் கூட நிலைமை மோசமாக முக்கிய காரணமாக இருந்தது.

கையை மீறி சென்ற சூழல்

இவை எல்லாம் நடந்த பிறகே, விஜய் அங்கிருந்த சூழலை உணர்ந்தார். ஆனால், அதன் பிறகும் அவர் அரசியல் பேச்சை விடவில்லை, "போலீசார் இங்கு இருக்கிறார்களா இல்லையா.. போலீஸ் கைகள் கட்டப்பட்டு இருக்கிறது. மக்களைத் தவிர யாருக்காகவும் பயப்படத் தேவையில்லை. இன்னுமே 6 மாதத்தில் ஆட்சி மாறும். காட்சி மாறும். அதிகாரம் கைமாறும். உண்மையான மக்கள் ஆட்சி அமையும். அப்போது அனைவருக்கும் 100% பாதுகாப்பு கிடைக்கும். நல்லதே நடக்கும். நம்பிக்கையுடன் இருங்கள்" என எல்லாம் பேசி முடித்த பிறகே தனது உரையை முடித்துக் கொண்டார்.

அதன் பிறகே ஆதவ் அர்ஜுனா மேடைக்கு ஏறி குழந்தை ஒன்று மாயமாகிவிட்டதாகச் சொன்னார். தொடர்ந்து விஜய்யும் அந்த குழந்தையின் பெயரைச் சொல்லிக் கண்டுபிடித்துத் தர உதவுமாறு கேட்டுக் கொண்டார். மேலும், போலீசார் தயவு செய்து உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துக் கொண்டு கிளம்பினார். அந்தளவுக்கு நிலைமை மோசமாகவே இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+