கச்சத்தீவு நமக்கில்லை! இந்தியா கால் வைச்சா..சீனா வரும்! பத்திரிகையாளர் மணி நச்!
சென்னை: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. இந்த நிலையில் கச்சத்தீவு தொடர்பாக உச்சநீதிமன்றத்திலேயே தீர்ப்பு பெற்றாலும் ஒன்றும் செய்ய முடியாது எனவும், ராணுவ நடவடிக்கை எடுத்தாலும் சீனா களத்தில் நிற்கும் என கூறியுள்ளார் பத்திரிகையாளர் மணி. மேலும், கச்சத்தீவு விவகாரத்தில் திமுக செய்தது துரோகம் எனவும் விமர்சித்துள்ளார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே இருக்கும் கச்சத்தீவு தொடர்பாக நீண்ட காலமாக பிரச்சனை இருக்கிறது. இந்தியா அரசின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத்தீவு 1974 ஆம் ஆண்டு இலங்கையுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் காரணமாக அந்த நாட்டுக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது.

கடந்த காலங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் அங்கு வலைகளை காய வைப்பது உள்ளிட்ட பல்வேறு மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தி வந்தனர். தொடர்ந்து கச்சை தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதுவே தமிழக மீனவர்களுக்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது.
இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில் கடந்த புதன்கிழமை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும், அதற்கான சட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கச்சத்தீவு தொடர்பாக உச்சநீதிமன்றத்திலேயே தீர்ப்பு பெற்றாலும் ஒன்றும் செய்ய முடியாது எனவும், ராணுவ நடவடிக்கை எடுத்தாலும் சீனா களத்தில் நிற்கும் என கூறியுள்ளார் பத்திரிகையாளர் மணி.
இதுதொடர்பாக ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர்," கச்சத்தீவை யார் வந்தாலும் மீட்க முடியுமா என்பது தெரியவில்லை. அது முடிந்த விஷயம். கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கடந்து விட்டது. 1970 காலகட்டங்களில் அன்றைய புவிசார் அரசியலில் சீனாவின் கட்டுப்பாட்டில் இலங்கை போய் விடக்கூடாது என்ற எண்ணத்தில் இலங்கைக்கு கொடுக்கப்பட்டது.
பெரியண்ணன் மனப்பான்மையில் இல்லாமல் சுற்றியுள்ள நாடுகளை அனுசரிக்க வேண்டும் என்று இந்தியா கச்சத்தீவை கொடுத்தது. சுற்றியுள்ள நாடுகள், பாகிஸ்தான் சீனா எல்லைகளை விஸ்தரிக்கின்றன. கடல் பிராந்தியத்தில் அவை கால் பதிக்கக் கூடாது என்பதற்காக கச்சத்தீவு கொடுக்கப்பட்டது. அது முடிந்து போன விஷயம். நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் கொடுக்கப்பட்டாலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தாலும் அதாவது கச்சத்தீவை மீட்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் அதனை இலங்கை ஏற்றுக் கொள்ளுமா
தற்போதைக்கு கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள அதன் சொந்த சொத்து. பழைய விஷயங்கள் எதுவுமே இனி எடுபடாது. 50 வருடங்கள் கடந்து விட்டது. அரை நூற்றாண்டுகள் கடந்து விட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பை கொடுத்தாலும் அதை ஒன்றும் செய்ய முடியாது .ராணுவ நடவடிக்கை ஒன்றே தான் வழி. ஆனால் அதுவும் முடியாது. இந்தியா போய் கச்சத்தீவில் நின்றால் இலங்கைக்கு ஆதரவாக சீனா வந்து நிற்கும். பத்தாண்டுகள் காங்கிரஸ் கூட்டணி அரசில் பங்கு வைத்த திமுக அவ்வளவு நாள் என்ன செய்தது.
தற்போது கச்சத்தீவை மீட்போம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை. காங்கிரஸ் கட்சி தீவை இலங்கைக்கு தாரை வார்த்த போது அமைதியாக வேடிக்கை பார்த்த திமுக தற்போது அதனை மீட்க வேண்டும் என தீர்மானம் போடுவதெல்லாம் ஏமாற்று அரசியல்" என கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
முழு பேட்டியை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் -












Click it and Unblock the Notifications