குறுக்கே வந்த கேசிபி.. கட்சியை காப்பாற்ற வேண்டிய நேரம்.. எம்ஜிஆர் விசுவாசிகளுக்கு ‘திடீர்’ அழைப்பு!
சென்னை : எப்போதெல்லாம் அதிமுக தடுமாறுகிறதோ, திசைமாறுகிறதோ, அதிமுக மீது மத்திய அரசு ஆதிக்கம் செலுத்த முயல்கிறதோ அப்போதெல்லாம் எம்.ஜி.ஆரின் விசுவாசிகளாகிய நாம் பாதுகாத்தால் மட்டும் தான் எம்.ஜி.ஆரின் புகழை இன்னும் பல வருடங்களுக்கு நிலை நாட்டமுடியும் என எம்.ஜி.ஆர் விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் கேசி பழனிசாமி.
எம்.ஜி.ஆர் வகுத்த விதிகளின் படி அதிமுக நடப்பதில்லை. தொண்டர்களுக்கு முக்கியத்துவம் தரும் இயக்கமாகவே இருக்க வேண்டும். தொண்டர்களால் மட்டும் தான் கட்சியை நிலை நாட்டை முடியும் என கேசி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அதிமுகவில் பிளவு ஏற்பட்ட நிலையில், கேசி பழனிச்சாமி எம்ஜிஆர் ரசிகர்களை ஒருங்கிணைத்து வருகிறார்.

கேசி பழனிசாமி
அதிமுக கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவராலும் கூட்டாக கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி. எம்.ஜி.ஆர் காலத்திலேயே எம்.எல்.ஏவாக இருந்தவர் கேசி பழனிசாமி. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தன்னை யாரும் கட்சியில் இருந்து நீக்க முடியாது எனக் கூறி, அதிமுக நிர்வாகி போலவே தற்போதும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார் கேசி பழனிசாமி. தமிழ்நாடு முழுவதும் பயணித்து பல இடங்களில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார் கேசிபி. காணொளிக் காட்சி வாயிலாகவும் அவ்வப்போது தொண்டர்களுடன் உரையாடி வருகிறார்.

கேசிபி பிளான்
அதிமுகவுக்கு தலைமை தாங்க ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்குமே தகுதி இல்லை என்று தொடர்ந்து பேசி வருகிறார் கேசிபி. குறிப்பாக, பாஜக தலைமையின் தயவை நாடி இருக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸை கடுமையாக விமர்சித்து வருகிறார். எடப்பாடி பழனிசாமியை விரும்பாத அதிமுக தொண்டர்களை ஒன்றிணைத்து, பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி, தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து, இரட்டை இலையும், சின்னமும் எங்களுக்குத்தான் என உரிமை கோரும் திட்டத்தோடு காய்களை நகர்த்தி வருகிறார் கேசி பழனிசாமி. இதனால், ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையுமே காட்டமாக விமர்சித்து வருகிறார் கேசி பழனிசாமி.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் இரு பக்கமும்
கேசிபியை தங்கள் அணிக்குக் கொண்டு வர வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். எனினும், ஓபிஎஸ் தரப்பின் பேச்சுவாரத்தைகளுக்கு கேசிபி செவிமடுக்கவில்லை. முக்கியமான பதவியை அளிப்பதாகக் கூறியும், கேசி பழனிசாமி, ஓபிஎஸ் உடன் இணைய மறுத்துவிட்டார். அதைத்தொடர்ந்து, ஈபிஎஸ் அணியும் கேசி பழனிசாமியை அணுகியது. கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மூத்த மாஜி அமைச்சர் மூலம் கேசிபியுடன் எடப்பாடி தரப்பு பேசியதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அதற்கும் கேசிபி பிடிகொடுக்கவில்லை.

எடப்பாடி வசம்
இந்நிலையில், அதிமுக வழக்குகளில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்புகள் வந்த நிலையில், அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளார் ஈபிஎஸ். இதனால், கிட்டத்தட்ட எடப்பாடி பழனிசாமியின் கையில் வந்துள்ளது அதிமுக. அதிமுக சிவில் வழக்கிலும், தேர்தல் ஆணையத்திலும் ஈபிஎஸ்ஸுக்கு ஆதரவான தீர்ப்பு வந்துவிட்டால், ஓபிஎஸ் நிலை பரிதாபகரமாகிவிடும். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் அணியினர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்நிலையில், எம்ஜிஆர் ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் கேசி பழனிசாமி.

1000 வருடங்களுக்கு மேல்
தொண்டர்களுடன் பேசிய கே.சி.பழனிசாமி, "இராஜராஜ சோழனின் புகழைப் போலவே எம்.ஜி.ஆரின் புகழையும் 1,000 வருடங்களுக்கு நிலைநாட்டுவோம். எம்.ஜி.ஆர் தான் அதிமுகவின் அடையாளம். பாஜகவை நிலைநாட்டி வழிநடத்திட ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் உள்ளன. அதேபோல் அதிமுகவை நிலைநாட்ட எம்.ஜி.ஆர் மன்றங்கள் மற்றும் எம்.ஜி.ஆரின் ரசிகர்களே உள்ளனர். அகில இந்தியாவிற்கே வழிகாட்டும் கட்சியாக அதிமுக திகழ வேண்டும். எப்போதெல்லாம் அதிமுக தடுமாறுகிறதோ, திசைமாறுகிறதோ, அதிமுக மீது மத்திய அரசு ஆதிக்கம் செலுத்த முயல்கிறதோ அப்போதெல்லாம் எம்.ஜி.ஆரின் விசுவாசிகளாகிய நாம் பாதுகாத்தால் மட்டும் தான் எம்.ஜி.ஆரின் புகழை இன்னும் பல 1000 வருடங்களுக்கு மேல் நிலை நாட்டமுடியும்.

எம்.ஜி.ஆர் விசுவாசிகளுக்கு அழைப்பு
கட்சியை நிறுவிய டாக்டர் எம்.ஜி.ஆர் தான் அதிமுகவின் அடையாளம். எம்.ஜி.ஆரின் ஒரே ஆசை அண்ணா படம் பதிந்த அதிமுக கட்சிக் கொடி ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் உயரப் பறக்க வேண்டும் என்பதே. உலகத்தில் எந்த தலைவரும் செய்திடாத ஒரு செயல் 1,000 கோடி மதிப்புள்ள சத்யா ஸ்டூடியோவை அதிமுக என்கிற கட்சிக்கு தனது காலத்திற்கு பின்பு சேர வேண்டும் என்று தன் உயிலில் குறிப்பிட்டவர் எம்.ஜி.ஆர். அப்படிப்பட்ட இயக்கம் இன்று எம்.ஜி.ஆர் வகுத்த விதிகளின் படி நடப்பதில்லை. தொண்டர்களுக்கு முக்கியத்துவம் தரும் இயக்கமாகவே இருக்க வேண்டும். தொண்டர்களால் மட்டும் தான் கட்சியை நிலை நாட்டிட முடியும்" எனத் தெரிவித்துள்ளார் கேசி பழனிசாமி.
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி












Click it and Unblock the Notifications