இப்போ என்ன?.. ஸ்கூல் பையன் மாதிரி.. பிடிஆரை சீண்டிய குஷ்பு.. அடுத்தடுத்து சொன்னதை பார்த்தீங்களா?
சென்னை: தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை டேக் செய்து பாஜக குஷ்பு சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.9,602 கோடி ஜிஎஸ்டி நிலுவை தொகையை விடுவித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. நேற்று இந்த நிலுவை தொகை விடுவிடுக்கப்பட்டது.
பிரதமர் மோடி கடந்த வாரம் சென்னைக்கு வந்திருந்த போது முதல்வர் ஸ்டாலின் மீண்டும் ஜிஎஸ்டி குறித்து கோரிக்கை வைத்தார். 15-5-2022 அன்று வரை தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய GST இழப்பீடு நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடி முன்னிலையில் கோரிக்கை விடுத்தார்.

ஜிஎஸ்டி விடுவிப்பு
இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய ரூ.9,602 கோடியை விடுவித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. மொத்தமாக மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகையான ரூ.86,912 கோடியை விடுவித்தது மத்திய அரசு. மே 31-ஆம் தேதி வரை மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையையும் இதன் மூலம் மத்திய அரசு விடுவித்துள்ளது.

குஷ்பு கேள்வி
இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதை வைத்து தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு பாஜக நிர்வாகி குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார். அதில், என்ன பிடிஆர் ஹலோ.. இப்போ என்ன? பெட்ரோல், டீசல் விலையில் நீங்கள் வரியை குறைப்பீர்களா? இல்லை நீங்கள் தேவையின்றி மீண்டும் கத்தி கத்தி பேசுவீர்களா? என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை விமர்சனம் செய்து குஷ்பு பேசி உள்ளார்.

ஸ்டாலின் பேசுவாரா
அதேபோல் பெட்ரோல், டீசல் பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசுவாரா? அல்லது ஸ்கூல் பையன் போல தொடர்ந்து புகார் லெட்டர்களை அனுப்புவாரா? என்று குஷ்பு காட்டமாக கேள்வி எழுப்பி இருக்கிறார். இன்னொரு போஸ்டில் குஜராத்தில் நடக்கும் கல்வி மாநாட்டில் கலந்து கொள்ளாத தமிழ்நாடு அரசை விமர்சனம் செய்துள்ளார். குஜராத்தில் புதிய கல்விக்கொள்கை தொடர்பாக மாநாடு நடக்கிறது.

குஜராத் மாநாடு
இதை தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளது. இதை குஷ்பு விமர்சனம் செய்துள்ளார். அதில், நீங்கள் ஏன் இதில் கலந்து கொண்டு, உங்கள் கருத்தை தெரிவிக்க கூடாது. தேசிய கேள்வி கொள்கை தொடர்பாக திமுக மக்களை தவறாக வழி நடத்துகிறது. அவர்களுக்கு பாஜகவை எதிர்க்க வேண்டும். நீங்கள் இதில் கலந்து கொள்ளாதது உங்கள் அச்சத்தை காட்டுகிறது. உங்களுக்கு தைரியம் இல்லை என்றால் கண்ணீர்விடுவதை நிறுத்துங்கள் என்று குஷ்பு விமர்சனம் செய்துள்ளார்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications