"மிரட்டறீங்களா.. யார் தெரியுமா?".. ஆர்.எஸ்.பாரதிக்கு இதெல்லாம் தேவையா.. குஷ்பு கேட்ட சுளீர்

திமுக மூத்த தலைவர் ஆர்எஸ் பாரதிக்கு குஷ்பு பதிலடி தந்து ட்வீட் பதிவிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: துணிச்சலுக்கும் துணிவுக்கும் பெயர் போன ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டி பார்க்கிறீர்கள்.. அண்ணாமலை யாருக்கும் பயப்படாத அஞ்சா நெஞ்சன் என்று ஆர்எஸ் பாரதிக்கு, குஷ்பு பதிலடி கொடுத்திருக்கிறார்.

10 வருடம் கழித்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது.. ஏராளமான பொருளாதார சிக்கல், கொரோனா பிரச்சனை, என பல்வேறு இடர்பாடுகளுக்கு நடுவே திமுக அரசு பொறுப்பேற்றது.

3இப்போது, ஆட்சிக்கு வந்து ஓராண்டும் நிறைவு பெற்றிருக்கிறது.. இதில் தேர்தல் வாக்குறுதிகள் பலவற்றை திமுக அரசு செய்து முடிக்க முடியவில்லை.

 திமுக

திமுக

இந்த ஒரு வருட சாதனையை முன்னிட்டு திமுக பொதுக்கூட்டம் நடத்தி வருகிறது.. அதில், தங்கள் சாதனைகளை ஒவ்வொரு மாவட்டத்திலும், லிஸ்ட் போட்டு விளக்கியும் வருகிறது.. அந்த வகையில், திண்டுக்கல்லில் கூட்டம் நடந்தது.. இதில், திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி கலந்து கொண்டு பேசிய பேச்சு, மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பிவிட்டது. வழக்கமாக ஆர்எஸ் பாரதி எது பேசினாலும் அது சர்ச்சையாக போய்விடும்.. இப்படி பேசுவதால், திமுக தலைமைக்கும் சில சமயம் தர்மசங்கடமாகிவிட்ட நிகழ்வுகளும் உண்டு.

 ஆர்எஸ் பாரதி

ஆர்எஸ் பாரதி

அந்த வகையில் திண்டுக்கல் கூட்டத்தில் பேசியபோது, பாஜகவையும் பிரதமரையும், அண்ணாமலையையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.. அதாவது, பிள்ளை பிடிக்கும் வேலையைதான் இந்த பாஜககாரர்கள் செய்து வருகிறார்கள். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகள் தமிழிசையை பிடித்து, பாஜகவில் சேர்த்துள்ளனர்.. அதே போல் திருச்சி சிவாவின் மகனை பிடித்து பாஜகவில் சேர்த்துள்ளனர்..

 கிருபானந்த வாரியார்

கிருபானந்த வாரியார்

தமிழகத்தில் தேவையில்லாமல் கலவரத்தை தூண்டும் வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார்.. அவர் இப்படி பேசி வருவது சரி கிடையாது.. அவருக்கு நான் ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன்... பழைய திமுககாரன் மறுபடியும் வந்து விடுவான்.. அதனால் அண்ணாமலை எச்சரிக்கையாக இருக்கணும். இப்படித்தான் அன்னைக்கு அண்ணாவைப் பற்றி தவறாக பேசினார் கிருபானந்த வாரியார்... அதனால் அதற்கு பிறகு அவர் எங்குமே வெளியே சென்று பேச முடியாத நிலை ஏற்பட்டது.. அதே மாதிரிதான், அண்ணாமலைக்கும் ஏற்படும்" என்றார்.

 டேமேஜ்

டேமேஜ்

ஆர்எஸ் பாரதி பேசியது வழக்கம்போல் அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், பாஜகவோ கொந்தளித்து போயுள்ளது.. திமுகவை டேமேஜ் செய்ய நினைத்தால், அந்த கட்சி நம்மை போட்டு தாக்குகிறதே என்ற ஆத்திரம் எழுந்துள்ளது.. ஆர்எஸ் பாரதியின் இந்த பேச்சை, அண்ணாமலையே விமர்சித்திருந்தார்.. "தமிழக மக்கள் பொய்களையும் ஏமாற்றுகளையும் அன்றாடம் கேட்க வேண்டிய நிலை இருக்கிறது" என்று கூறியிருந்த நிலையில், பாஜக பிரமுகர் குஷ்புவும் ஆவேசமாகி உள்ளார்.

 குஷ்புவுக்கு கோபம்

குஷ்புவுக்கு கோபம்

இதுகுறித்து குஷ்பு ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. அதில், "எங்களை மிரட்டுகிறீர்கள்... நீங்கள் எவ்வளவு பலவீனமாக இருக்கிறீர்கள் என்பதைதான் இந்த மிரட்டல் எடுத்துக்காட்டுகிறது.. ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்... நீங்கள் ஒரு சாதாரண ஆளை மிரட்டவில்லை. துணிச்சலுக்கும் துணிவுக்கும் பெயர் போன ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டி பார்க்கிறீர்கள். அவர் எதுக்குமே யாருக்கும் பயப்படாத அஞ்சா நெஞ்சன்" என்று குஷ்பு காட்டமாக கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+