குஷ்பு பெயர் இல்லாத பாஜக உள்ளாட்சித் தேர்தல் பணி குழு... மாஜி திமுக, அதிமுகவினருக்கு முக்கிய இடம்..!
சென்னை: உள்ளாட்சித் தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக பாஜக சார்பில் நியமிக்கப்பட்ட 17 பேர் கொண்ட சிறப்புக் குழுவில் நடிகை குஷ்பு பெயர் இடம்பெறவில்லை.
பாஜகவின் நட்சத்திர பிரச்சாரகராக உள்ள குஷ்பு, தமிழகம் கடந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பாஜகவுக்காக தேர்தல் பரப்புரை மேற்கொண்டவர்.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் பணி குழுவில் அவர் பெயர் இடம்பெறாதது அவரது ஆதரவாளர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல்
தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களிலும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் இந்த மாவட்டங்களில் தேர்தலை சந்திப்பதற்கு தயாராகி வருகின்றன.

பாஜகவினர்
அந்த வகையில் தமிழக பாஜக உள்ளாட்சித் தேர்தல் பணிகளை கவனிக்க சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது. அதில் பொன்ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீனிவாசன், கே.டி.ராகவன், உள்ளிட்டோருடன் அதிமுகவிலிருந்து பாஜகவில் இணைந்த நயினார் நாகேந்திரன், கார்த்தியாயினி போன்றோரின் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன. இதேபோல் திமுகவிலிருந்து பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி, கு.க.செல்வம் போன்றோரின் பெயர்களும் உள்ளன.

நட்சத்திர பேச்சாளர்
இதனிடையே பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் உள்ள நடிகை நமீதா, நடிகை குஷ்பு, உள்ளிட்டோரும் பாஜக தேர்தல் பணி குழுவில் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு அங்கு இடமில்லை. ஊரக உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை கிராமப்புற மக்களின் வாக்குகளை சார்ந்தது. அவர்களிடம் வாக்குக் கேட்டுச் செல்ல குஷ்புவை விட இன்னொருவர் பொருத்தமான நபராக இருக்க முடியாது.

குஷ்பு கருத்து
ஆளுநர்கள் நியமனத்தின் போதே குஷ்பு தெரிவித்திருந்த கருத்து பாஜகவின் டெல்லி மேலிடம் வரை சென்றிருக்கிறது. அதன் எதிரொலியாக இப்போது குஷ்பு புறக்கணிக்கப்பட்டுள்ளாரோ என்ற விவாதமும் எழுந்துள்ளது. இதனிடையே சசிகலா புஷ்பாவுக்கு தேர்தல் பணிக் குழுவில் இடம் அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications