துரதிருஷ்டவசமானதுதான்.. ஆனால் ஒட்டுமொத்தமாக கட்சியை குறை சொல்வது வேதனையா இருக்கு.. குஷ்பு
சென்னை: தமிழக பாஜகவில் பாலியல் புகாரில் சிக்கியது துரதிருஷ்டவசமானது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் அதற்காக கட்சியையே குறை சொல்வது வேதனை அளிப்பதாக நடிகை குஷ்பு தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் கே டி ராகவன். வழக்கறிஞரான இவர் கால் நூற்றாண்டுக்கும் மேல் ஆர் எஸ் எஸ் இயக்கம் , பாஜகவில் இருந்து வருகிறார்.
மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் தமிழக பாஜக மாநில பொது செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் என்பவர் வீடியோ காலில் பாஜக பெண் நிர்வாகி ஒருவருடன் கே டி ராகவன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

வீடியோ வெளியானது
இந்த வீடியோ வெளியானதை அடுத்து மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் ஆலோசனை நடத்திய கே டி ராகவன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்றைய தினம் அறிவித்திருந்தார். மேலும் இந்த குற்றச்சாட்டுகள் பொய்யானது என்றும் இதை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

கே டி ராகவன் விவகாரம்
இந்த நிலையில் கே டி ராகவன் விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் அவரை டிரோல் செய்து வருகிறார்கள். அவரிடம் கட்சி ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மதன் வெளியிட்ட வீடியோவில் கூறுகையில் பாஜக பெண் நிர்வாகிகள் நிறைய பேரை இது போல் பதவி கொடுப்பதாகவும் தேர்தலில் சீட் வாங்கிக் கொடுப்பதாகவும் கூறி பாலியல் சீண்டல்களில் அதுவும் வீடியோ காலில் ஈடுபட்டு பின்னர் மோசமான செய்கைகளை செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையே
இதையடுத்து பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஒரு சாரார் கருத்து தெரிவித்தார்கள். அது போல் காயத்ரி ரகுராம் தனது ட்வீட்டில் கூறுகையில் இன்று காலை எழுந்தவுடன் என் கண்களை என்னால் நம்ப முடியாத அளவுக்கு ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளதாக ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
Recommended Video

காயத்ரி ரகுகாம் ட்வீட்
அது போல் இன்னொரு ட்வீட்டில் காயத்ரி ரகுராம் கூறுகையில் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தின் முன்னிருந்து தப்பினாலும் தெய்வம் தண்டிக்கும். அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என தெரிவித்துள்ளார்.
|
பாஜகவை சேர்ந்த குஷ்பு
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து பாஜகவின் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் தேசிய பாஜகவிலும் சரி தமிழக பாஜகவிலும் சரி எனக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட்டுத்தான் வருகிறது. ஆனால் இங்கு நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது. இது விசாரிக்கப்பட வேண்டிய ஒரு விவகாரம். அதற்காக பாஜகவில் பெண்களை மதிப்பதே இல்லை என ஒட்டுமொத்த கட்சியையும் சிலர் குற்றம்சாட்டும் போது எனக்கு வேதனை அளிக்கிறது.
|
பெண்கள் தலைமை பொறுப்பு
பாஜகவின் கீழ் ஏராளமான பெண்கள் தலைமை பொறுப்பில் இருந்து வருகிறார்கள் என தெரிவித்துள்ளார். இதற்கு நெட்டிசன்களும் பதில் அளித்துள்ளார்கள். அவர்கள் தனது ட்வீட்டில், சரியாக சொன்னீர்கள் மேடம். இதுதான் உண்மை. நீதி வேண்டும். பதவிகளை கொண்டு பெண்களை காரணம் காட்டி பெண்களை கவர முடியாது. எனவே நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும். அது மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். நீங்கள் சொன்னது போல் மற்ற கட்சிகளை காட்டிலும் பெண்களை மதிக்கும் ஒரே கட்சி பாஜகதான் என்கிறார் இந்த நெட்டிசன்.
|
ட்வீட்டை போட முடியாது
இந்த சம்பவம் தமிழக பாஜகவில் பொதுச் செயலாளர் எனும் உயர் பதவியிலிருந்தவருடன் தொடர்புடையது. சும்மா மேம்போக்காக ஒரு ட்வீட்டை போட்டுவிட்டு நான் போக முடியாது. இந்த சம்பவத்தை நீங்கள் கண்டிக்கிறீர்களா இல்லையா என்பதை சொல்லவில்லையே என்கிறார் இன்னொரு நெட்டிசன்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா?












Click it and Unblock the Notifications