கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் கவனிச்சீங்களா? "890" ரெடியா நிக்குதாமே.. தமிழக அரசின் ஸ்பெஷல் அறிவிப்பு
சென்னை: வார விடுமுறையை முன்னிட்டு, சிறப்பு பேருந்துகள் குறித்த அறிவிப்பை, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது..., அத்துடன், இப்பேருந்துகளுக்கான வழித்தடம் குறித்த தகவல் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
பணிநிமித்தம், கல்வி, உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, சொந்த ஊரிலிருந்து பொதுமக்கள் நகரங்களுக்கு கிளம்பி செல்வது வழக்கமான ஒன்றுதான்.. அந்தவகையில், சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர் போன்ற தொழிற்நகரங்களில் வெளியூர் மக்கள் ஏராளமானோர் தங்கியிருக்கிறார்கள்.

பணிநிமித்தம்: இவர்கள் வார இறுதி நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் அல்லது தொடர் விடுமுறை நாட்களில், அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும் இயல்பான விஷயமே. அந்தவகையில், தற்போது வாரவிடுமுறை ஆரம்பமாகி உள்ளது.. தற்போது புரட்டாசி மாதமும் துவங்கிவிட்ட நிலையில், கோயில் விசேஷங்களுக்கும் பலரும் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு வருகின்றனர்.
அந்தவகையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது... இந்த சிறப்பு பேருந்துகள் குறித்த அறிக்கையை போக்குவரத்து துறை விடுத்துள்ளது. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு இதுதான்:
சிறப்பு அறிவிப்பு: "வார விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (செப்.21, 22) சென்னையிலிருந்தும் பிற இடங்களுக்கு தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (செப்.20) 260 பேருந்துகளும், சனிக்கிழமை 260 பேருந்துகளும் இயக்கப்படும்.
கோயம்பேடு : இதேபோல, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 65 பேருந்துகள் என மொத்தம் 130 பேருந்துகளும் இயக்கப்படும்.
மேலும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோயம்புத்தூா் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு நகரங்களுக்கும் 200 கூடுதல் பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 20 பேருந்துகளும் என மொத்தம் 40 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதன்மூலம் மொத்தம் 890 கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.
பயண திட்டம்: தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications