கியர் மாறுது கிளாம்பாக்கம்.. வேற லெவல் போகும் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு..கூடும் மக்களின் நம்பிக்கை
சென்னை: கிளாம்பாக்கத்தில் இன்று முதல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.. இது பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தந்து வருகிறது.
கிளாம்பாக்கம் விவகாரம் தலைதூக்கியதையடுத்து, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக போக்குவரத்து துறை தொடர்ந்து விளக்கம் தந்து வருகிறது. எனினும், கடந்த வெள்ளிக்கிழமையன்று, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்றைய தினம் செய்தியாளர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், கூடுதலான பல விளக்கங்களை தந்திருந்தார்.. குறிப்பாக அமைச்சர் பேசும்போது கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போராட்டம் குறித்து விளக்கம் தந்தார்.
போராட்டம்: "கலைஞர் நூற்றாண்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வாரம் ஒருமுறை நானும் அமைச்சர் சேகர் பாபுவும் வந்துக் கொண்டுதான் இருக்கிறோம். இங்கு என்ன தேவை இருக்கிறது என்ற கருத்துக்களை கேட்டு அவற்றை சரி செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
வெள்ளிக்கிழமை போராட்டத்தை சொல்லியே கிளாம்பாக்கம் பிரச்சினையை பூதாகரம் ஆக்குகிறார்கள். மதுராந்தகம் அருகே ஒரு விபத்து ஏற்பட்டதால், அந்த பஸ்கள் உரிய நேரத்தில் வந்து சேர முடியவில்லை. அன்று கூடுதலான பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த நாள் என்பதால் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், வந்து சேர வேண்டிய பேருந்துகள் தாமதம் ஏற்பட்டதால் மக்கள் கோபம் அடைந்து மறியல் செய்தார்கள். அதுவும் ஒரு குறிப்பிட்ட நேரம் தான் மறியல் நடந்தது.. காலையில் இருந்து இரவு வரை எந்த பிரச்சினையும் இல்லை. இரவு 12 மணிக்கு மேல் பஸ்கள் சேவை இருக்கும் என்ற எண்ணத்தில் சிலர் வந்து விடுகிறார்கள். 200 - 300 பேர் அந்த நேரத்தில் வந்து கொண்டு பஸ்களை கேட்டால் சாத்தியமா?
பஸ்கள்: திருமண நாட்கள் போன்ற தொடர் விடுமுறை நாட்களில் கூடுதலாக பயணிகள் வரும்போது ஏற்கனவே திட்டமிடப்படாத கூடுதல் பஸ்களும் இயக்கப்படுகிறது. அப்படி இயக்கும்போது இரவு 12 மணி, 1 மணிக்கு வந்து நின்று கொண்டு, பஸ்கள் வேண்டும் என்றால் என்ன செய்வது? பஸ்களை கூட பக்கத்தில் டெப்போக்களில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அந்த நேரத்தில் டிரைவர்கள்? கண்டக்டர்கள்?
அதிகாலை நேர பயணம் செய்வது ஆபத்தானது, விபத்துக்கள் அதிகம் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளால், அது தவிர்க்கப்படுகிறது. பொதுமக்களும் தங்கள் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
போக்குவரத்துகள்: கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலிருந்து வெளியூர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 361 பேருந்துகள், மற்ற போக்குவரத்து கழகங்கள் சார்பில் 734 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இன்று காலை முதல் கூடுதலாக 120 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.. அதன்படி, கிளாம்பாக்கத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 1,215 பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்பட உள்ளன.
கிளாம்பாக்கம் குறித்து இனியும் வதந்தி பரப்புவோர் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கிளாம்பாக்கத்தில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த, மக்களின் கருத்துகள் கேட்டு, சரி செய்யப்பட்டு வருகிறது. 6 ஏடிஎம்கள் மற்றும் 50 கடைகள் திறப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன"என்றார் அமைச்சர்.
வெள்ளிக்கிழமை: இன்றைய தினம் வார விடுமுறை துவங்கியிருப்பதால், கிளாம்பாக்கத்துக்கு பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. எனினும், இன்று முதல் கிளாம்பாக்கத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்திருப்பதால், இடர்பாடுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பிருக்காது என்றும் நம்பப்டுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications