கிளாம்பாக்கத்துக்கு போறதா? கோயம்பேட்டுக்கு போறதா? ஆம்னி அலறவிடுதே.. இவ்ளோ சிக்கலா? தமிழக அரசு பதில்?
சென்னை: வருகிற 24ம் தேதிக்கு பிறகு, சென்னைக்குள் வர தடை விதிப்புக்கு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.. இதுகுறித்த தங்கள் நடைமுறை சிக்கல்களையும் விவரித்துள்ளனர்.
தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் கிளாம்பாக்கத்தில் இருந்தே கிளம்பி வருகின்றன. வரும் 24 ஆம் தேதிக்குக் பிறகு ஆம்னி பஸ்களும் கிளாம்பாக்கத்தில் இருந்தே கிளம்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு கூறியிருந்தார்.

பயணிகள்: அதாவது, பயணிகளுக்கான அனைத்து வசதிகளையும் செய்து தரும் வரை, கோயம்பேட்டில் இருந்தே பஸ்கள் புறப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால், 24ம் தேதிக்கு பிறகு பயணியருடன் சென்னை நகருக்குள் வர ஆம்னி பஸ்களுக்கு அனுமதியில்லை. ... கிளாம்பாக்கம் புதிய நிலையத்தில் விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன...
தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் நிலையத்தில் தான் பயணியரை ஏற்றி, இறக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை மீறி செயல்படும் ஆம்னி பஸ்களின் உரிமத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையரகம் எச்சரித்துள்ளது. இதுதான், ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
கோயம்பேடு: இந்த நிலையில், கோயம்பேட்டில் இருந்தே ஆம்னி பஸ்கள் புறப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் அதிரடியாக அறிவித்துள்ளனர். கிளாம்பாக்கத்தில் மெட்ரோ, புறநகர் ரெயில் நிலையம் வரும் வரை இதே நிலை இருக்கும் என்றும் ஜிஎஸ்டி சாலையை கடந்து கிளாம்பாக்கம் வர மக்கள் சிரமப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், "கிளாம்பாக்கத்திற்கு பொதுமக்கள் வந்து செல்ல மெட்ரோ ரயில், புறநகர் ரயில், பஸ் வசதிகள் இல்லை. ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்களை, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்குள் நிறுத்தும் அளவுக்கு பணிமனை கிடையாது. கிளாம்பாக்கத்திற்கு இந்த வசதிகள் வந்து சேரும் வரை கோயம்பேட்டில் இருந்து தான் ஆம்னி பஸ்களை இயக்க போகிறோம்.
கிளாம்பாக்கம்: இப்போது கிளாம்பாக்கம் வரப் பொதுமக்கள் ஓலா, ஊபர் மற்றும் ஆட்டோ பயன்படுத்த ஆயிரம் ரூபாய் முதல் 1500 வரை செலவாகிறது.. ஜிஎஸ்டி சாலைக்கு எதிரே கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு அமைந்துள்ள நிலையில், ஜிஎஸ்டி சாலையின் கடந்து பஸ் ஸ்டாண்டிற்குள் செல்ல சிரமமாக இருக்கிறது. இதை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பயணிக்கும் 40% மக்கள் தாம்பரத்தைத் தாண்டி கிண்டி, அசோக் நகர், கோயம்பேடு வரக்கூடிய பயணிகளாக இருக்கிறார்கள். அவர்கள் வசதியையும் நாங்கள் பார்க்க வேண்டிய சூழல் உள்ளது. மத்திய அரசுக்கு பணம் தருகின்ற ஏடிஎம் ஆக மாநிலங்களை மாற்றிவிட்டார்கள்.. மேலும், மாநகருக்குள் ஆம்னி பேருந்துகள் வந்து செல்ல சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பும் எங்களிடம் இருக்கிறது. எனவே அரசு இதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றனர்.
சிக்கல்கள்: இந்நிலையில், தமிழ்நாடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மேலும் சில சிக்கல்களை முன்னிறுத்துகிறார்கள், அதாவது, கிளாம்பாக்கத்தில் ஆம்னி பஸ்களுக்காக 25 அலுவலக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தினமும் 1,000 பஸ்கள் வரும் நிலையில், 100 பஸ்கள் மட்டுமே நிறுத்துவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. முடிச்சூர் வரதராஜபுரத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் நிலையம் கட்டி முடிக்க 9 மாதங்களாகும். அதுவரை பஸ்களை எங்கே நிறுத்த முடியும்?
புதிய பஸ் ஸ்டாண்டிற்கு அனைத்து வகையிலும் ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் இப்போதைய சூழலில், போதிய அடிப்படை வசதியில்லை.. செங்குன்றம், பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பஸ்களின் பராமரிப்பை நாங்கள் மேற்கொண்டு வரும் சூழலில் இதுபோன்ற உத்தரவால் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை உரிமையாளர்கள் சந்திக்க நேரிடும். காரணம், இதனை நம்பி 2 லட்சம் பேர் உள்ளனர். ...
தடையில்லை: பகுதி, பகுதியாக கிளாம்பாக்கத்துக்கு மாற அனுமதிக்க வேண்டும் எனறு முன்பே கோரிக்கை வைத்தோம். ஆனால், உடனடியாக மாற வேண்டுமென உத்தரவிடுகின்றனர்.
ஆம்னி பஸ்கள் நகருக்குள் வந்து செல்ல தடையில்லை என சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.. அதனால், அனைத்து வசதிகளும் வரும் வரை கோயம்பேடில் இருந்துதான், ஆம்னி பஸ்கள் புறப்பட்டு கிளாம்பாக்கம் சென்று பயணியரை ஏற்றிச் செல்ல திட்டமிட்டுள்ளோம்" என்றனர்.
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications