கிளாம்பாக்கத்தில் "இது" வேற கிளம்பிருச்சே.. கோட்டைக்கே போயிட்டாங்க.. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு பரபர
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து முனையம் குறித்து, தமிழக போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் நம்பிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில், முழுமையான வசதிகள் இன்னும் அமைக்கப்படவில்லை என்ற புகார்கள் கிளம்பி உள்ளன.. எனவே, அடிப்படையான சில வசதிகளையும் செய்துதர வேண்டும் என்பதுடன், இணைப்பு போக்குவரத்தையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்று பயணிகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலேயே பயணிகள் இறங்கி, பஸ்கள் வழியாக மட்டுமே சென்னைக்குள் வர முடியும். ஆனால், மெட்ரோ வசதி இல்லாதவர்களாலும், சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடிவதில்லை.
மூட்டை முடிச்சு: கிளாம்பாக்கத்தில் இறங்கினால், பக்கத்திலிருக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கு செல்ல குறைந்தது ஒன்றரை கிலோமீட்டருக்கு போக வேண்டியிருக்கிறது.. கையில் மூட்டை முடிச்சுகள், குழந்தைகளுடன் அவ்வளவு தூரம் போகவும் முடிவதில்லை.. அதனால்தான், கிளாம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனை உடனடியாக திறக்க வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். இந்த பணிகள் அனைத்தையும் உடனடியாக கையில் எடுத்துள்ளது தமிழக அரசு.. எனவே, கிளாம்பாக்கம் பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில்தான், இன்னொரு பிரச்சனை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலிருந்து கிளம்பி உள்ளது.. இந்த பஸ் ஸ்டாண்டில், சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணிபுரிய இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த சிக்கல்: இதுகுறித்து தமிழ்நாடு ஆம்னி பஸ் அண்ணா தொழிலாளர்கள் சங்கம் மற்றும் ஓட்டுநர் சங்கத்தின் சென்னை மாவட்ட தலைவர் அண்ணாதுரை தலைமை செயலகத்தில் முதல்வரின் தனி பிரிவில் மனு ஒன்றினை தந்துள்ளார்.
அந்த மனுவில், கோயம்பேட்டில் ஆம்னி பஸ் இயக்கப்பட்டு வந்த இடமான சென்னை ஒப்பந்த ஊர்தி பேருந்து நிலையத்தில் எங்களுக்கு தமிழக அரசால் தனியாக இடம் ஒதுக்கீடு செய்து தரப்பட்டது. அங்கு நாங்கள் தங்கி இருந்து சுமை தூக்கும் பணியாற்றி வந்தோம். எங்கள் சங்க உறுப்பினர்களை நம்பி சுமார் 3 ஆயிரம் குடும்பங்கள் உள்ளனர். நாங்கள் சுமார் 47 ஆண்டுகளாக சுமை தூக்கும் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகிறோம்.
கோயம்பேடு: மேலும், எங்களில் சிலர் பதிவு முகவர்களாகவும், டிக்கெட் பதிவு செய்து தரும் நபர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது, கோயம்பேட்டில் இயங்கி வந்த ஆம்னி பஸ்கள் அனைத்தும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அதனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் நாங்கள் பணிபுரிய இடம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும்" என்று அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி அமைச்சர்கள் சேகர்பாபு, சிவசங்கர் ஆகியோரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது.. எனவே, சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணிபுரிவதற்காகவே, இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று நம்பப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications