நாளை முதல் கிளாம்பாக்கத்தில் ஆரம்பம்.. சென்னையில் ஸ்பெஷல் பஸ்களுக்கான ரிசர்வேஷன் அறிவிப்பு.. சபாஷ்
சென்னை: தொடர் விடுமுறை காரணமாக சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கப்பட உள்ள நிலையில், முன்பதிவு குறித்த தகவல்களும் வெளியாகியிருக்கின்றன.
தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், ஏராளமானோர் சுற்றுலா தளங்களுக்கு திரண்டு சென்று கொண்டிருக்கிறார்கள். எனவே, இதுபோன்ற சமயங்களில் பஸ்கள் நெரிசல் மிகுந்து காணப்படும் என்பதால், ஸ்பெஷல் பஸ்களை தமிழக போக்குவரத்து துறை அறிவித்திருக்கிறது.
சுபமுகூர்த்த நாட்களும் வரவுள்ளதால், அதாவது, நாளை 3 மற்றும் 5-ந்தேதி விசேஷ நாட்களாக இருப்பதால் வெளியூர் பயணம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சென்னையில் இருந்தும் பிற இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அறிவிப்பு: இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் மோகன் வெளியிட்டிருந்த அறிவிப்பில், "கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 3-ந்தேதி 290 பஸ்களும், 4-ந்தேதி 365 பஸ்களும் இயக்கப்படுகிறது.
இதுபோலவே, கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 3, 4-ந்தேதியில் 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தினசரி இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன் கூடுதலாக இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
முன்பதிவு: 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.. எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in. மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
தொடர் விடுமுறை காரணமாக கிளாம்பாக்கத்தை போலவே, 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.. எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in. மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும்" என்று அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.
கோயம்பேடு: ஆக, நாளை 3ம் தேதி முதல் கிளாம்பாக்கத்திலிருந்து 290 பஸ்களும், மே 4-ம் தேதி 365 பஸ்களும், கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருக்கு மே 3, மே 4-ம் தேதிகளில் 55 பஸ்களும் இயக்கப்பட உள்ளன..
இதைத்தவிர, ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பஸ்களும் இயக்க முடிவாகியிருக்கின்றன.
ரிசர்வேஷன்: இந்நிலையில், இந்த பஸ்களில் முன்பதிவு குறித்த அறிவிப்புகளும் வெளியாகியிருக்கிறது. அதன்படி, வார இறுதியில் வெள்ளிக்கிழமை 5,827 பயணிகளும் சனிக்கிழமை 3,831 பயணிகளும் மற்றும் ஞாயிறுக்கிழமை 6,522 பயணிகளும் பேருந்துகளில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருக்கிறார்களாம். எனவே, நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in. மற்றும் செல்போன் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று போக்குவரத்து துறை கேட்டுக் கொண்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications