அடுத்த 3 நாட்களில்.. உங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா? எளிதாக தெரிந்து கொள்ள வாய்ப்பு
சென்னை: மகளிர் உரிமை தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. வரும் நவம்பர் 12ம் தேதியில் இருந்து மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் செய்யப்படுகிறது.
கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்த அனைவருக்கும் பணம் வழங்கப்படும் அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இதற்கான களப்பணி முடிந்துவிட்டது. இதற்கு இடையே மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

மகளிர் உரிமை தொகை திட்டத்தின் விண்ணப்பங்களை எளிதாக பின்வரும் வழியில் அறிய முடியும். இந்த திட்டத்தின் இணையதளமான பக்கத்திற்குச் சென்றால், இரண்டு முக்கியப் பிரிவுகளைக் காணலாம்: "புதிய முகாம்களின் விவரங்கள்" மற்றும் "உங்கள் மனுவின் நிலை".
மகளிர் உரிமை தொகை - விண்ணப்பத்தின் நிலை
இதில், "உங்கள் மனுவின் நிலை" என்ற பிரிவைத் தேர்வு செய்தால், அது தமிழக முதலமைச்சரின் உதவி மைய இணையதளமான பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். இந்தப் பக்கத்தில் முதன்முறையாகப் பயன்படுத்துபவர்கள் "பதிவுசெய்" (Register) என்பதைச் கிளிக் செய்து, தங்கள் பெயர் மற்றும் அலைபேசி எண் போன்ற விவரங்களைப் பூர்த்தி செய்து கணக்கைத் தொடங்க வேண்டும்.
பதிவுசெய்த பிறகு, பயனர்களுக்கு இரண்டு தேர்வுகள் ஆங்கிலத்தில் காண்பிக்கப்படும்: "குறையை கண்காணி" (Track Grievance) மற்றும் "குறையை பதிவுசெய்" (File a Grievance). இதில், "குறையை கண்காணி" என்பதைத் தேர்ந்தெடுத்தால், நீங்கள் பதிவுசெய்த அலைபேசி எண்ணைப் பயன்படுத்தி உள்நுழையலாம்.
மகளிர் உரிமை தொகை - விண்ணப்பம்
உள்நுழைந்தவுடன், நீங்கள் சமர்ப்பித்த மனுவின் தற்போதைய நிலையைத் தெரிந்துகொள்ள முடியும். மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது பரிசீலனையில் உள்ளதா என்பதை இதன்மூலம் தெளிவாக அறிந்துகொள்ளலாம்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளிகள் பட்டியலை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு தயாராகி வருகிறது. புதிதாகப் பெறப்பட்ட அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், விரைவில் இறுதி லிஸ்ட் வெளியிடப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
நவம்பர் 15 வரை மாநிலம் முழுவதும் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்கள் மூலம் கிட்டத்தட்ட 28 லட்சம் புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. புதிய விண்ணப்பங்களைப் பதிவு செய்யவும் தேவையான ஆவணங்களைப் கொடுக்கவும் இந்த முகாம்கள் பெண்களுக்கு உதவியுள்ளன. பெறப்பட்ட விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணிகளை அரசு தொடங்கியுள்ளது. இந்த சரிபார்ப்புப் பணியில் வருமான விவரங்கள், முகவரிச் சான்றுகள் மற்றும் தகுதி அளவுகோல்கள் ஆகியவை கவனமாக ஆய்வு செய்யப்பட்டது.
புதிய பட்டியல் அறிவிக்கப்பட்டவுடன், டிசம்பர் 13 முதல் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.1000 கிடைக்கும். இந்த நடவடிக்கை ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு, குறிப்பாக கிராமப்புற மற்றும் குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களுக்கு நிதிச் சுமையைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஏற்கனவே மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான பெண்களைச் சென்றடைந்துள்ளது. இந்த விரிவாக்கத்தின் மூலம், ஆரம்பக் கட்டத்தில் விண்ணப்பிக்கத் தவறிய அல்லது காலக்கெடுவை இழந்த அதிகமான பெண்களைச் சென்றடைய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications