கொடநாடு வழக்கு! மேத்யூ சாமுவேலுக்கு எதிரான வழக்கில் எடப்பாடி பழனிசாமி முக்கிய கோரிக்கை
சென்னை: பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிரான மான நஷ்ட ஈடு வழக்கில் சாட்சியப்பதிவு நடைமுறையை வேறு தேதிக்கு மாற்றி வைக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மாஸ்டர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து, வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல், சயான், வாளையார் மனோஜ் ஆகியோருக்கு எதிராக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் மான நஷ்ட ஈடு கோரி, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 2019ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் சாட்சியப் பதிவு நடைமுறையை மேற்கொள்வதற்காக வழக்கறிஞர் ஆணையராக எஸ்.கார்த்திகை பாலன் தனி நீதிபதியால் நியமிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணையின்போது, ஜனவரி 30, 31ம் தேதிகளில் மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க தயாராக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மாஸ்டர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமியின் வழக்கு பட்டியலிடப்படாத நிலையில், இன்று பட்டியலிடப்பட்டு இருந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி ஆஜராகவில்லை.
அவர் தரப்பில் மான நஷ்ட ஈடு கோரிய பிரதான வழக்கில் மேத்யூ சாமுவேல் தாக்கல் செய்த பதில்மனுவில் தெரிவித்துள்ள அவதூறு கருத்துக்களை நீக்க கோரி தனது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்,
அந்த மனு நிலுவையில் உள்ளதால் சாட்சியப்பதிவு நடைமுறையை வேறு தேதிக்கு மாற்றிவைக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்று கொண்ட மாஸ்டர் நீதிமன்றம், வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதிக்கு திரும்ப அனுப்பியுள்ளது.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்?












Click it and Unblock the Notifications