இது லிஸ்ட்ல இல்லயே.. கோடநாடு விவகாரம்.. டிடிவி கொடுத்த திடீர் அறிவிப்பு.. திரும்பி பார்க்கும் அதிமுக
சென்னை: கோடநாடு வழக்கில் திமுக அரசு மெத்தனம் காட்டுவதாகவும் வழக்கை விரைந்து விசாரித்து உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி வரும் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் அணி போராட்டம் நடத்துகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ளது கோடநாடு எஸ்டேட். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்த வரைக்கும் அவ்வப்போது இங்கு ஓய்வு எடுப்பது வழக்கம். ஜெயலலிதா மறைந்த பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி அதாவது எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் அங்கு கொள்ளை முயற்சி நடந்தது. இதில், அந்த எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கோடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை கொள்ளைக்குப் பிறகு அடுத்தடுத்து நடந்த விபத்துகள், தற்கொலைகள், மரணங்கள் பலவித சந்தேகங்களை கிளப்பின. அதிமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற விசாரணையில் உருப்படியாக எதுவும் சிக்கவில்லை.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது. சிபிசிஐடி தற்போது இந்த வழக்கை விசாரித்து வருகிறது. நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோடநாடு விவகாரத்தை கையில் எடுத்த ஓபிஎஸ் அணி, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கினை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்க கோரி ஓ பன்னீர் செல்வம் கோரினார்.
அதுமட்டும் இன்றி இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமு க அரசை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில், அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் ஆகஸ்டு 1-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஓபிஎஸ் அணி அறிவித்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் மதுரையில் அதிமுக பிரம்மாண்ட மாநாடு நடத்த உள்ளது.
இந்த நிலையில், ஓபிஎஸ் அணி மாநிலம் முழுவதும் தனது பலத்தை காட்டும் வகையில், கோடநாடு விவகாரத்தை வைத்து எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த நிலையில், ஓபிஎஸ் அணி நடத்தும் இந்த ஆர்ப்பாட்டத்தில் டிடிவி தினகரனின் அமமுகவும் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஓ பன்னீர் செல்வத்துடன் இணைந்து டிடிவி தினகரனும் பங்கேற்கிறார். இது தொடர்பாக ஓபிஎஸ் அணி தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது:- கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு செயல்படும் தி.மு.க அரசைக் கண்டித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அணியின் சார்பில் 01.08.2023 அன்று நடைபெறவிருக்கும் கண்டன ஆர்பாட்டங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பங்கெடுக்கிறது.
தேனியில் நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்தில் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் கலந்துகொள்கிறார்கள். இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மிகவும் நேசித்த இடமான கோடநாட்டில், அவரது மறைவிற்குப் பின் நடைபெற்ற கொள்ளை மற்றும் கொலை குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை ஆட்சிக்கு வந்த 90 நாட்களுக்குள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைப் பெற்று தருவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது, ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், இவ்வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
இவ்வாறு வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாத வகையில் மெத்தனப் போக்கோடு தூங்கி வழியும் தி.மு.க அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் 01.08.2023 செவ்வாய்கிழமை அன்று காலை10:30 மணியளவில் ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணியினர் கண்டன ஆர்பாட்டங்களை நடத்த உள்ளனர்.
இக்கண்டன ஆர்பாட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனது ஆதரவைத் தெரிவித்திருந்த நிலையில், தேனியில் நடைபெற உள்ள கண்டன ஆர்பாட்டத்தில் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களுடன் இணைந்து கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் பங்கேற்க உள்ளார்.

தமிழகம் முழுவதும் அனைத்து வருவாய் மாவட்டங்களிலும் நடைபெறவுள்ள இக்கண்டன ஆர்பாட்டத்தில் அந்தந்த கழக மாவட்டத்தைச் சார்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாநில, மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழகம் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களது அணியினருடன் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications