18000 புதிய வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டது என்னவானது? அதிகாரிகள் வேகமாக இயங்கணும் -கொங்கு ஈஸ்வரன்
சென்னை: பாழடைந்த பள்ளிக்கட்டிடங்கள் என்ன வேகத்தில் இடிக்கப்பட்டதோ அதே வேகத்தில் புதிய பள்ளிக்கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
திமுக கூட்டணியில் அங்கம் வகித்தாலும் கூட சமீபநாட்களாக இவரது அறிக்கைகள் அனைத்தும் அனல் பறக்கும் வகையிலும் அரசை விமர்சிக்கும் வகையிலும் உள்ளன.
பள்ளிக்கல்வித்துறை தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

பள்ளிக் கட்டிடங்கள்
கடந்த வருடம் திருநெல்வேலியில் கட்டிடம் இடிந்து பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்த போது தமிழகம் முழுதும் சிதிலமடைந்த ஆயிரக்கணக்கான பள்ளிக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. பராமரிக்க முடியும் என்று தெரிந்த கட்டிடங்களைக் கூட புதுக் கட்டிடம் கட்டப்படும் என்ற வாக்குறுதிகளோடு பல கட்டிடங்கள் இடிக்க முடிவெடுத்து இடிக்கப்பட்டன. திரும்ப அவற்றை கட்டுவதற்கான நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட வேண்டும்.

நல்ல முன்னெடுப்பு
இப்போது பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கின்ற நடைமுறைகளில் பாழடைந்த கட்டிடங்கள் இடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. நல்ல முன்னெடுப்பு தான், ஆனால் மாற்று ஏற்பாடுகளுக்கான திட்டங்கள் இல்லாமல் இடிக்கப்படும் போது பள்ளிக் குழந்தைகள் மரத்தடியில் கல்வி கற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

18000 புதிய வகுப்பறைகள்
பள்ளிக் கட்டிடங்களை பொறுத்தவரை அதனுடைய அத்தியாவசியம் கருதி நடவடிக்கைகள் வேகப்படுத்த வேண்டும். சென்ற நிதிநிலை அறிக்கையில் 18,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும் என்று திட்டமிடப்பட்டது. அந்த சிறப்பான திட்டங்களை வேகப்படுத்தி நிறைவேற்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

மாற்று ஏற்பாடுகள்
புதிய மாற்று ஏற்பாடுகளை தயார்படுத்தி வைத்துக்கொண்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பள்ளிக்கல்வி என்பது தமிழகத்தின் எதிர்கால தலைமுறையை திறனுள்ளதாக உருவாக்கக் கூடியது. பள்ளிக் கல்வித்துறைக்கு தேவையான நிதி உடனடியாக ஒதுக்கப்பட வேண்டும். அதிகாரிகள் கவனத்தோடு சரியான நேரத்தில் நடவடிக்கைகள் மேற்கொண்டால் இப்போது நடக்கின்ற அசம்பாவிதங்களை தவிர்க்க முடியும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications